கன்னியாகுமரி – கேரளா செக்போஸ்டில் அமைச்சர் மனோதங்கராஜ் அதிரடி ஆய்வு! அலறிய கேரளா தமிழ்நாடு எல்லை!

0
156
#image_title

கன்னியாகுமரி – கேரளா செக்போஸ்டில் அமைச்சர் மனோதங்கராஜ் அதிரடி ஆய்வு! – போலீசாரை கடுமையாக கண்டித்த அமைச்சர்! அலறிய கேரளா தமிழ்நாடு எல்லை!

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு அதிகன ரக வாகனங்களில் கனிம வளங்களை கொண்டு செல்லுவதாக பொதுமக்கள் மத்தியில் பல்வேறு புகார்கள் எழுந்தது இதனால் சாலைகள் விரைவாக சுக்கு நூறாக உடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் உத்தரவின் பெயரில் வட்டாட்சியர், சப்கலெக்டர், போலீசார், RTO ஆகியோருடன் தனி தனி ஸ்பெஷல் Squad அமைத்து அதிகமாக பாரம் ஏற்றி வரும் வாகனங்களுக்கு பல கோடிக்கு அபராதம் விதிக்கபட்டது.

இதனால் 1000 கணக்கில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் முயற்சியில் அடியோடு குறைந்தது, என்ன தான் உயர் மட்டங்களில் இருந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் அறிவுறுத்தினாலும், அரசு துறையில் இருக்கும் சில கருப்பு ஆடுகள் கனிம வள கொள்ளை கும்பலுடன் இணைந்து கடத்தலுக்கு துணை செல்வதாக சர்ச்சைகள் உருவானது. சர்ச்சைகளில் சிக்கிய பல காவல் துறையினர் சஸ்பெண்டும் செய்யப்பட்டனர்.

இருந்தாலும் அவ்வப்போது அதிக பாரத்துடன் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கனிம வளங்கள் கொண்டு செல்ப்படுவதாக புகார் இருந்தது, பல்வேறு ஆய்வு கூட்டங்களை அமைச்சர் மனோதங்கராஜ் அவர்கள் அதிகாரிகளுடன் நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார், எடுக்கப்பட நடவடிக்கைகளின் ரிப்போர்டை ஆய்வு செய்து வந்தார்.

இந்நிலையில் கன்னியாகுமரி – கேரளா எல்லையான கோழிவிளை சோதனை சாவடியில் சோதனைகள் நடத்தாமல் கனிம வள லாரிகளை போலீசார் அனுமதித்து வருவதாக கிடைக்கபெற்ற ரகசிய தகவலை அடுத்து நேற்று நள்ளிரவு அதிரடியாக சோதனை சாவடிக்கே நேரே சென்று ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் மனோதங்கராஜ் .

அப்போது லாரிகளை சோதனை செய்யாமல் போலீசார் அனுப்பி வருவது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் கடுமையான கோபம் அடைந்த அமைச்சர் மனோதங்கராஜ் அங்கு பணியில் இருந்த காவலர்களை கடுமையாக சாடி எச்சரித்தார். தொடர்ந்து சோதனை சாவடியிலே இருந்த அமைச்சர் அங்கு வந்த கனிம வல லாரிகளை மடக்கி பிடிக்க உத்தரவிட்டு அதனை களத்தில் நின்றே பார்வையிட்டார்.

மேலும் காவல் கண்காணிப்பாளர் திரு. ஹரி கிரண் பிரசாத் அவர்களை கைபேசியில் அழைத்து உறுதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த அதிரடி நடவடிக்கையால் சோதனை சாவடியில் பணி புரியும் போலீசார் கலகத்தில் உள்ளனர். இது தொடர்பான காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.