திமுக அரசை கண்டித்து அனைத்து மாவட்டங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள்!!

0
200
Demonstrations on behalf of AIADMK in all districts condemning the DMK government!!
Demonstrations on behalf of AIADMK in all districts condemning the DMK government!!

திமுக அரசை கண்டித்து அனைத்து மாவட்டங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள்!

திமுக அரசை கண்டித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவி விலக வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்த உள்ளனர்.

இது குறித்து அஇஅதிமுக கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை செய்தியில், இரண்டாண்டு இருண்ட திமுக ஆட்சியில், தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள்; கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு; கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும்; இவைகளுக்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருகின்ற 29.05.2023 – திங்கட்கிழமை காலை 10 மணியளவில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் இல்லாத மாவட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்கான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச்  சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; கழகம் மற்றும் சார்பு அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும்; உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும்; கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அறிக்கையின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Previous articleஆர்.சி.பி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதியான அணி கிடையாது! கேப்டன் பாப் டுபிளிஸ் கருத்து!!
Next articleதிமுக ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகள்!!