திமுக ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகள்!!

0
85
#image_title

திமுக ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகள்!

திமுக அரசுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எப்படி சரி செய்யப் போகிறார் என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.

கள்ளச்சாராயம் மரணங்கள், போலி மதுபான புழக்கம், தமிழகமெங்கும் நாள்தோறும் நடைபெறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் திமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு அவர்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் வருகின்றனர். இருப்பினும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்து தான் வருகிறது. கஞ்சா மற்றும் மதுபான பழக்கத்தால் பல்வேறு இளைஞர்கள் திசை மாறி செல்கின்றனர். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி பல்வேறு தீய செயல்களில் அவர்களின் ஈடுபடுகின்றனர்.

காவல்துறையினரை, ஆளும் திமுக கட்சியினர் தங்களுடைய சுய வேலைக்காக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுயமாக செயல்பட விடாமல் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக அமைச்சர்கள் திமுக எம்.எல்.ஏக்கள் மீதும் புகார்கள் எழுந்துள்ளன. ஊடகங்களில், பத்திரிகைகளில் நாளுக்கு நாள் சமூக சீர்கேடு தொடர்பான செய்திகள் அதிகம் இடம் பெறுகின்றன. இந்நிலையில் திமுக அரசு துரிதமாக செயல்பட்டு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே அடுத்த ஆண்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மேலும் திமுக அமைச்சர்கள் அவரவர் துறைகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பொதுமக்களை அதை சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. திமுக நிர்வாகிகள் கிராமப்புறங்களில் ஊராட்சி பகுதிகளில் அடாவடியில் ஈடுபடுவதாகவும் மக்கள் குறை கூறுகின்றனர். இதனை திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் சரி செய்ய வேண்டுமென ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

author avatar
CineDesk