இதோ 20 ரூபாயில் இரத்த கொதிப்பை கட்டுக்குள் வைக்கலாம்.. உடனே ட்ரை பண்ணுங்க!!
இரத்தக் கொதிப்பு காரணமாக மாத்திரை சாப்பிட்டு வருபவர்கள் இன்றைய காலக்கட்டத்தில் அதிகரித்து வருகின்றனர். ஒரு சிலருக்கு குறை இரத்த அழுத்தமும் சிலருக்கு உயர் இரத்த அழுத்தமும் உள்ளது.
இந்த இரத்தக் கெதிப்பை மாத்திரைகளால் மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும் என்று இல்லை. இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் இரண்டு காய்கறிகளை சாப்பிடுவதன் மூலமும் இரத்தக் கொதிப்பை கட்டுக்குள் வைக்கலாம்.
அடுத்து உயர் இரத்த அழுத்தம் உடையவர்களும் குறை இரத்த அழுத்தம் உடையவர்களும் என்ன செய்ய வேண்டும் எந்த காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.
முதலில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு…
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வெண்டைக்காயை அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த வெண்டைக்காயை தினமும் காலை, மதியம், இரவு என்று மூன்று வேலைகளில் எடுத்துக் கொள்ளும் பொழுது உயர் இரத்த அழுத்தமானது குறைந்து விடும்.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வெண்டைக் காயை பச்சையாகவே சாப்பிட வேண்டும். காலையில் 5 வெண்டைக்காய், மதியம் 5 வெண்டைக்காய், இரவு 5 வெண்டைக்காய் என்று மூன்று வேலைகளிலும் வெண்டைக் காயை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறையத் தொடங்கும்.
இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருந்தால் அவர்கள் அனைவரும் மூன்று வேலைகளிலும் தலா 10 வெண்டைக் காய்களை பச்சையாக சாப்பிட வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிடலாம். உணவு சாப்பிட்ட பின்பும் சாப்பிடலாம். உணவு சாப்பிடுவதற்கு முன்பு வெண்டைக் காய்களை சாப்பிடுவது ரொம்ப நல்லது.
இந்த வெண்டைக் காயை சாப்பிடும் பொழுது உயர்ந்த இரத்த அழுத்தம் குறைந்து சீராகும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். நன்கு தூக்கம் வரும். மூளை நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும். கோபம் என்பது குறையும்.
குறை இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு…
குறை இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீர்க்கங்காயை உணவில் அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறை இரத்த அழுத்தம் உள்ளவர்கள் 100 கிராம் அளவு பீர்க்கங்காய் எடுத்து தோல், விதை, சதையுடன் நறுக்கி மிக்சி ஜாரில் போட்டுக் கொள்ளவும். பிறகு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு அரைத்த பின்னர் இதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
இந்த ஒரு டம்ளர் அளவு உள்ள பீர்க்கங்காய் ஜூசை உமிழ் நீருடன் சேர்த்து கொப்பளித்து குடித்து வந்தால் குறைந்த இரத்த அழுத்தம் சமநிலைப்படும்.
இந்த பீர்க்கங்காய் ஜூசை ஒரு சில மாதங்கள் வரை குடிக்கலாம். குறை இரத்த அழுத்தத்திற்கு மாத்திரை சாப்பிடுபவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரையின் டோசேஜ் அளவை குறைத்துக் கொண்டு இந்த பீர்க்கங்காய் ஜூசை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
குறை இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த பீர்க்கங்காய் ஜூசை தினமும் காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் குடிக்க வேண்டும்.
இதோடு சேர்த்து பாரம்பரிய அரசி உணவு வகைகள், காய்கறிகள், பழச்சாறுகள் எல்லாம் அதிக அளவு எடுத்துக் கொள்ளலாம்.