ஐயோ அம்மா வலிக்குது.. மருமகளின் அந்தரங்க உறுப்பில் மாமியார் செய்த விபரீதம்!!
மத்திய பிரதேசம் போபாலில் உள்ள விதிஷா என்ற இடத்தில் வசிக்கும் பெண்ணுக்கு, சுகி செவானியா கிராமத்தில், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற சில நாட்களிலேயே, மனைவியிடம் வரதட்சனை வாங்கி வருமாறு கொடுமைப் படுத்தியுள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கிடையே தினந்தோறும் சண்டை நடந்துள்ளது.
பலமுறை பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும், கணவன் மற்றும் மனைவி இருவரிடையே பேசினாலும் வரதட்சனை பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. கணவன் யாருடைய பேச்சையும் கேட்காமல் தினமும் சண்டை போடுவதால் அந்த பெண் யாரிடமும் சொல்லாமல் அவருடைய தாய் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர், தன்னுடைய மனைவியை காணவில்லை என அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே அந்த பெண் அவருடைய தாய் வீட்டில் இருப்பதை அறிந்த அவருடைய மாமியார் மற்றும் மைத்துனர் அந்த பெண்ணிடம், உங்கள் இருவருக்குமிடையில் சண்டை வருமாறு நாங்கள் நடந்து கொள்ள மாட்டோம் என கூறி சாமதானம் செய்துள்ளனர். இதை நம்பி அந்த பெண்ணும் மாமியார் மற்றும் மைத்துனருடன் கணவர் வீட்டிற்கு வந்தார். அந்த பெண் வீட்டிற்கு வந்தவுடன் அந்த பெண்ணின் கணவன், மாமியார் மற்றும் மைத்துனர் என மூவரும் ஒன்று சேர்ந்து அந்த பெண்ணை ஒரு அறையில் போட்டு அடைத்து வைத்தனர்.
பிறகு அந்த பெண்ணை நிர்வாணமாக்கி, சூடான இரும்பு கம்பியை எடுத்து பெண்ணின் உடல் உறுப்புகள் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் சூடு வைத்துள்ளனர். அதை தாங்க முடியாத அந்த பெண் அலறியுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் வந்து அந்த பெண்ணை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த பெண்ணை உடனே மருத்துமனையில் சேர்த்தனர். மருத்துவமனையிலிருந்து, காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அங்கு வந்த காவலர்கள் அந்த பெண்ணின் கணவன், மாமியார் மற்றும் மைத்துனர் மூவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது வரதட்சனை கொடுமை, துன்புறுத்துதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.