90-ஸ் கிட்ஸ் பேவரைட் தொகுப்பாளர் நியாபகம் இருக்கா? எப்படி இருக்கார் பாருங்க!

0
183
Remember the 90's kids favorite host? Look how he is!
Remember the 90's kids favorite host? Look how he is!

90-ஸ் கிட்ஸ் பேவரைட் தொகுப்பாளர் நியாபகம் இருக்கா? எப்படி இருக்கார் பாருங்க!

சன்டிவியில் ஒளிபரப்பான ராசிபலன் நிகழ்ச்சியின் மூலம் 90-ஸ் கிட்ஸ் மத்தியில் பெரிதும் பிரபலம்மானவர் விஜே விஷால் சுந்தர். இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. பெப்சி உமா, விஜயசாரதி, செய்தி வாசிப்பாளர் ரத்னா போன்ற பிரபலங்களின் ரி-என்ட்ரி எப்போது என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். தினமும் ராசிபலன் படிக்கும் விஜே விஷால் சுந்தரை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. மேஷராசி நேயர்களே என்று தொடங்கி மீன ராசிவரை அவர் பேசும் தமிழை பலரும் ரசித்துள்ளனர்.

காலை எழுந்தவுடன் பெரும்பாலான வீடுகளில் இவரின் குரல் கேட்கும். டி.சி.எஸ் நிறுவனத்தில் வேலை பார்த்துகொண்டே 18 ஆண்டுகள் சன்டிவியில் ராசிபலன் படித்து வந்தார். வெளிநாட்டு வேலை காரணமாக லண்டன் சென்றதால் நிகழ்ச்சியில் இருந்து விலகினார். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். மேஷ ராசி நேயர்களே இன்று கோடை வெப்பம் அதிகமாக உள்ளதால் தண்ணீர் பாட்டிலுடன் மட்டுமே செல்ல வேண்டும் என ஆரம்பித்தார்.

தொடர்ந்து நான் மீண்டும் மீடியா துறைக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஜோதிடத்தை நான் வாசித்தாலும் ஜோசியத்தை நம்பி  என் வாழ்க்கையை நகர்த்த துளி கூட விருப்பம் இல்லை. என் மகனுக்கு 21 வயதாகிறது இருந்தும் நான் இன்னும் ஜாதகம் கணிக்கவில்லை.  ஜோதிடரிடம் இருந்து ஸ்கிரிப்ட் வந்துவிட்டால் உடனே நானும் எனது உடையை என் ராசிக்கு ஏற்ற நிறத்தில் மாற்றிக்கொள்வேன்.

நான் படித்துகொண்டே ராசி பலன் ஷோவை செய்தேன்.  நான் மீடியாவில் இருக்கும்போது ரகுவரன் சாருடன் நடிக்க வாய்ப்பு வந்தது. சில காரணங்களால் அதை ஏற்க முடியவில்லை. மீண்டும் திரையில் ரி-என்ட்ரி கொடுக்க விரும்புகிறேன். விரைவில் சீரியல் அல்லது சினிமாவில் என்னை பார்க்கலாம் என்று விஷால் சுந்தர் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K