உங்களுடைய முகத்தில் மங்கை நீக்க ஆப்பிள் சிடர் வினிகரை இப்படி பயன்படுத்துங்கள்!!

Photo of author

By CineDesk

உங்களுடைய முகத்தில் மங்கை நீக்க ஆப்பிள் சிடர் வினிகரை இப்படி பயன்படுத்துங்கள்!!

மங்கு என்று சொல்லப்படும் முகத்தில் கருந்திட்டு   படர்வதை மெலஸ்மா என்று கூறிவார்கள்.இது ஒரு சரும பிரச்சினையாகும். இந்த மங்கு ஆண்களை விட பெண்களுக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகம். இது முகத்தில் வருவதால் முகத்தின் அழகு கெடுகிறது. இதை எப்படி வீட்டிலிருந்தபடியே சரி செய்வது என பார்க்கலாம்.

அதிகமான வெயில் நம் சருமத்தின் மீது படுவதாலும், ஹார்மோன் மாற்றங்களாலும், அதிகமான மன உளைச்சல், டாக்ஸின் மற்றும் தைராய்டு பிரச்சினைகள் என பல காரணங்கள் மூலமாக இந்த மங்கு வருகிறது.

ஆப்பிள் சிடர் வினிகர் இந்த மங்கு பிரச்சினைக்கு ஒரு சிறந்த தீர்வாகும். நல்ல ஆர்கானிக் ஆப்பிள் சிடர் வினிகரை வாங்கி கொள்ளவும். ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் தண்ணீர் இரண்டையும் சம அளவு எடுத்து கலந்து கொள்ளுங்கள். கலந்து வைத்துள்ளதை மங்கு உள்ள இடத்தில் நன்றாக தடவவும். அது நன்றாக காய்ந்த பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவி விடவும்.

இந்த தினமும் ஒரு முறை செய்யவும். தொடர்ந்து ஒரு வாரம் செய்யும் போது மங்கு மறைவதை கண்கூடாக பார்க்கலாம்.