கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனைக்கு கிராம்பு மாலை பரிகாரம்!!

0
136
#image_title

கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனைக்கு கிராம்பு மாலை பரிகாரம்!!

கிராம்பு என்பது மகாலட்சுமியின் அம்சமாக இருக்கிறது. வாசனை நிறைந்த அனைத்து பொருட்களிலும் மகாலட்சுமி நிறைந்து இருக்கிறாள். கோவில்களில் செய்யக் கூடிய பெரிய பெரிய யாகங்களிலு,ம் ஹோமங்களிலும் பிரதான இடத்தைப் பிடிப்பது இந்த கிராம்பு தான். அவ்வாறு வீட்டில் ஏதேனும் சாபம் செய்வதாக இருந்தாலும் முதலில் ஒரு கலசம் வைக்கப்படுகிறது. அதில் நீர் நிறைத்து கொண்டு, அதனுடன் சில பொருட்கள் போடப்படுகின்றன.அவற்றில் முதலாவதாக இருப்பது இந்த கிராம்பு தான். இந்த கிராமிபிற்க்கு பொதுவாகவே நேர்மறை அதிர்வுகளை உட்கிரகிக்கும் திறன் உள்ளது. இதனை வைத்து பூஜை செய்வதன் மூலம் நினைத்த காரியத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும். இந்த கிராம்பு வைத்து செய்யக்கூடிய பரிகாரத்தை எவ்வாறு செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தை ஏதாவது ஒரு வாரம் வெள்ளிக்கிழமைகளில் தான் செய்ய வேண்டும். அதுவும் காலையில் ஆறு மணிக்கு இந்த பரிகாரம் செய்யும் பொழுது அது சக்தி வாய்ந்த பரிகாரமாக இருக்கும். அதற்கு முதலில் கிராம்பை எடுத்து உங்கள் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு என்னுடைய கடன் முழுவதுமாக அடைக்கப்படும். அதற்கு தேவையான பணத்தை இந்த பிரபஞ்சம் எனக்கு தரும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். கிராம்பை மாலையாக செய்யும் பொழுது 108 முடிச்சுகள் கொண்ட மாலையாக அமைய வேண்டும். ஒவ்வொரு முடிச்சுகள் போடும் பொழுது உங்களுடைய வேண்டுதல்களை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சேர்ந்து வேறு பிரச்சனைகள் இருக்கையில் அதனையும் கூறிக்கொண்டு மாலையை கொடுக்க வேண்டும். இந்த மாலையை கோவில்களில் இருக்கக்கூடிய பாம்பு புற்றிற்கோ அல்லது சூலாயத்திற்கோ இந்த மாலையை போட வேண்டும். இப்படி தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் செய்து வரும் பொழுது ஐஸ்வர்யம் உண்டாகும், சுபிட்ஷம் உண்டாகும், லட்சுமி கடாட்சமானது பெருகும். இது மட்டும் இல்லாமல் இதனை வீட்டில் இருக்கும் சாமி படத்திற்கும் அணிவித்து இதனுக்கு இதற்கு தீப ஆராதனை காட்டி வழிபட்டு வருகையில் நல்ல பலன்கள் கிடைக்கும்.