ஆயுசுக்கும் மாரடைப்பு வராமல் தடுக்க இந்த ஒரு ட்ரிங்க் குடிங்க!!
தற்போது உள்ள கால காலசூழ்நிலையில் வயது பாகுபாடின்றி அனைவருக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. வயதானவர்களுக்குதான் மாரடைப்பு வரும் என்ற நிலை மாறி தற்போது இளம் வயதினரும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உடல் பருமன், சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் உடல் உழப்பின்மை போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது.
மேலும் மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எந்த வயதிலும் மாரடைப்பு வராமல் தடுப்பதற்கான எளிய வீட்டு வைத்தியத்தை பார்க்கலாம்.
இதற்கு 3 பொருட்கள் மட்டுமே தேவை.
அருகம் புல்
தக்காளி
மாதுளம் பழத்தின் தோல்
முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து ¼ லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்தவுடன் ஒரு கைப்பிடி அளவு அருகம் புல்லை போடவும். அருகம் புல்லில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. இது ரத்த நாளங்களில் ஏற்படக் கூடிய அடைப்பு, வால்வு சுருக்கம் போன்றவற்றை சரி செய்கிறது.
அடுத்ததாக 1 தக்காளியை கட் செய்து போடவும். தக்காளி இதயத்திற்கு, குறிப்பாக ரத்த நாளங்களுக்கு மிகவும் நல்லது.
கடைசியாக மாதுளம் பழத்தோலை போடவும். மாதுளம் பழத்தின் தோல்களும், ரத்த நாளங்களுக்கும், ரத்த குழாய்களில் ஏற்படக்கூடிய அடைப்புகளுக்கும் சிறந்தது. இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவும்.
இந்த தண்ணீரை வடிகட்டி குடித்து வந்தால் மாரடைப்பு, ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை போக்கி, ரத்த ஓட்டத்தை சீராக வைக்கும்.