ரஜினி? விஜய்? யார் பக்கம் சாய்வார் லோகேஷ் கனகராஜ் !

0
186

ரஜினி? விஜய்? யார் பக்கம் சாய்வார் லோகேஷ் கனகராஜ் !

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் அல்லது ரஜினி இருவரில் யாரை இயக்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாநகரம் படத்தின் வெற்றியை அடுத்து கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். அந்த படத்தின் இமாலய வெற்றி உச்ச நட்சத்திரங்களின் பார்வையை லோகேஷ் மேல் பட வைத்தது. இதையடுத்து விஜய்க்கு அவர் சொன்ன கதை பிடித்து போக மாஸ்டர் திரைப்படம் உருவானது. சமீப காலங்களில் விஜய் நடித்து குறைந்த காலத்தில் உருவான திரைப்படம் மற்றும் கம்மியான செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை மாஸ்டர் பெற்றுள்ளது.  இந்த படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ள நிலையில் லோகேஷ் அடுத்து யாரை இயக்க போகிறார் என்பதே இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.  ஏனென்றால் ரஜினி, விஜய் ஆகிய இரு சூப்பர் ஸ்டார் நடிகர்களும் அவர் இயக்கத்தில் நடிக்க விரும்புகின்றனர்.

கைதி படத்தின் வெற்றியைப் பார்த்த கமல், லோகேஷிடம் கதை கேட்க ரஜினிக்காக தயார் செய்து வைத்திருந்த ஒரு கதையை சொன்னார் லோகேஷ். அதை கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பதாக முடிவாயிற்று. ஆனால் ரஜினி சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் இப்போது முடக்கப்பட்டுள்ளார். அதை முடித்துவிட்டு வர எப்படியும் இந்த ஆண்டு இறுதியாகிவிடும் என சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் தனது 65 ஆவது படத்தையும் லோகேஷையே இயக்க சொல்லி விஜய் கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஒரு வேளை ரஜினி படம் திட்டமிட்டப்படி தொடங்கவில்லை என்றால் நாம் சீக்கிரமாக ஒரு படம் பண்ணலாம் என அவர் லோகேஷிடம் சொல்லியுள்ளாராம். ஒருவேளை ரஜினி படம் தொடங்கப்பட்டு விட்டால் சுதா கொங்கராவின் கதையில் நடிக்கலாம் என்றிருக்கிறாராம். அதனால் அடுத்து ரஜினியா? விஜய்யா? என்பது லோகேஷ் எடுக்க வேண்டிய முடிவு.

Previous articleமகளுடன் ஷாலினி அஜித் பார்த்த திரைப்படம்: வைரலாகும் புகைப்படம்
Next articleதமிழ் தெரிந்தால் போதும் மாதம் எழுபதாயிரம் சம்பாதிக்கலாம்? வேலைவாய்ப்பை உருவாக்கும் பாடலாசிரியர்..!!