மகளுடன் ஷாலினி அஜித் பார்த்த திரைப்படம்: வைரலாகும் புகைப்படம்

0
191

நேற்று வெளியான திரௌபதி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஷாலினி அஜீத்தின் சகோதரர் ரிச்சர்ட்ஸ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். ரூபாய் 90 லட்சத்தில் தயாரான இந்த திரைப்படம் முதல் நாளே ரூபாய் 2 கோடி தமிழகம் முழுதும் வசூல் செய்துள்ளதாகவும் இன்னும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால் ஒரே வாரத்தில் ரூபாய் 5 கோடி வரை வசூலிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்று சென்னை ரோகினி திரையரங்கில் தல அஜித்தின் மனைவி ஷாலினி அஜித், தனது மகள் அனுஷ்காவுடன் இந்த படத்தை பார்க்க வந்துள்ளார். அவரை வரவேற்ற திரையரங்கு உரிமையாளர் அவரை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டரில் போட்டு அசத்தியுள்ளார்

தல அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் தங்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்த்தது தங்களுக்கு பெருமையாக இருப்பதாகவும் அவர் அந்த டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். ஷாலினி அஜித் தனது சகோதரர் நடிப்பை பார்த்து ரசித்ததாகவும், இந்த படம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் படம் முடிந்து வெளியே வந்தபோது பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Previous articleசூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா பாதிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி !
Next articleரஜினி? விஜய்? யார் பக்கம் சாய்வார் லோகேஷ் கனகராஜ் !