கணவனை கொன்ற கூலிப்படையினர்!! வேடிக்கை பார்த்த மனைவி!!
பீகார் மாநிலத்தை சேர்ந்தார் இஷ் முகமது மியான் இவர் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி நூர்ஜகான். இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இவர் தனது வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருக்கும் போது கூலிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது கொலை செய்யப் பட்டவரின் மனைவி நூர்ஜகான் செல்போனை போலீசார் சோதனை செய்தனர். அப்போது நூர்ஜகான் தான் முக்கிய குற்றவாளி என தெரிய வந்துள்ளது.
இதை பற்றி விசாரித்த போது இவர்களுக்கு 6 குழந்தைகள் இருப்பதால் வீட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய நூர்ஜகானின் கணவர் வெளிநாடு சென்றுள்ளார். அந்த நேரத்தில் நூர்ஜகானுக்கும், பதுவா பஜாரை சேர்ந்த நவுசாத் ஆலம் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நூர்ஜகானின் கணவர் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த பிறகும் இவர்களின் தொடர்பு நீடித்துள்ளது.
இதை பற்றி தெரிந்த அவரது கணவர் நூர்ஜகானை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நூர்ஜகானும், நவுசாத் ஆலமும், இஷ் முகமது மியானை கொல்ல திட்டம் தீட்டியுள்ளனர். நூர்ஜகான் வெளிநாட்டிலிருந்து கணவன் சம்பாதித்த பணத்தில் இருந்து 50 ஆயிரத்தை நவுசாத்திடம் கொடுத்து கூலிப்படையை சேர்ந்த ஆட்களை ஏற்பாடு செய்துள்ளார்.
அதன்படி கூலிப்படையை சேர்ந்த மன்சூர் ஆலம், பர்வேஸ் அன்சாரி மற்றும் நூர்ஜகானின் காதலன் நவுசாத் ஆலம் ஆகிய மூவரும் வாசலில் படுத்திருந்த இஷ் முகமது மியானை சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் இவர்களை போலீசார் கைது செய்து விசாரித்த போது நூர்ஜகான் கொடுத்த பணத்தில் 28 ஆயிரம் கொடுத்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வாங்கியதாகவும், கணவன் கொல்லப்படுவதை நூர்ஜகான் ஜன்னலின் அருகே நின்று பார்த்துக் கொண்டிருந்தார் என குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளி நூர்ஜகான் ஆவார்.