திருமணத்திற்கு வராத சசிகலா.. போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்!! ஏமாற்றத்தில் ஓபிஎஸ்!!

0
300
Sasikala didn't come to the wedding.. All the plans were a waste!! OPS in disappointment!!
Sasikala didn't come to the wedding.. All the plans were a waste!! OPS in disappointment!!

திருமணத்திற்கு வராத சசிகலா.. போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்!! ஏமாற்றத்தில் ஓபிஎஸ்!!

ஒற்றை தலைமை விவகாரம் தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பக்கம் சாதகமாக அமைந்திருக்கும் நிலையில்,இனி நமது பாட்சா பலிக்காது என பன்னீர் செல்வம் தினகரனுடன் கூட்டு சேர்ந்து விட்டார். மேலும் எடப்பாடி அவர்கள் மீது அதிருப்தியாக உள்ள நிர்வாகிகளையும் தங்கள் பக்கம் கூட்டு சேர பல்வேறு திட்டங்களை ஓபிஎஸ் வகுத்து வருகிறார்.

அந்த வகையில் ஓபிஎஸ், தினகரன், சசிகலா இவர்கள் மூவரும் கூட்டணியில் ஒன்றிணைந்து விட்டனர் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்தாலும், எந்த ஒரு இடத்திலும் மூவரும் ஒன்றிணைந்து காணப்படவில்லை. அவ்வாறு இவர்கள் மூவரையும் நிற்க வைத்து தங்களது பலத்தை காட்ட வேண்டும் என்று வைத்திலிங்கம் திட்டமிட்டார்.

அதற்காகத்தான் தனது மகன் திருமண விழாவில் கலந்து கொள்ளும்படி மூவருக்கும் அழைப்பு விடுத்து இருந்தார். இன்று அவரது மகன் திருமண விழாவில் பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் மட்டுமே கலந்து கொண்டனர். இருவரும் ஒரு நொடி கூட இணைபிரியாமல், திருமணம் ஆரம்பித்தது முதல் பந்தி போட்டு உணவு உண்ணும் வரை சேர்ந்தே இருந்தனர். இவர்களுடன் சசிகலா மட்டும் ஏன் வரவில்லை என்ற கேள்வி பலருக்கும் இருந்தது.

அவருக்கு கை முறிவு பிரச்சனை உள்ளதாகவும், இது குறித்து வைத்த வைத்தியலிங்கத்திடம் பத்திரிக்கை வைக்கும் பொழுது தனது உடல் நலம் குறித்து கூறியதாகவும் தற்பொழுது தகவல்கள் வெளிவந்துள்ளது. உடல்நல பாதிப்பு காரணமாக தான் வைத்தியலிங்க மகனின் இல்ல திருமண விழாவில் சசிகலாவால் கலந்து கொள்ள முடியவில்லையாம்.

ஆனால் மற்றொருபுறம் இது சசிகலாவின் வேறொரு திட்டமாக இருக்குமா? என்றும் யூகிக்க ஆரம்பித்துள்ளனர். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அவர்கள் ஒன்றிணைந்து சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்ட பொழுது, இறுதியாக சசிகலா அவர்கள் அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என்று கூறி பின்வாங்கினார்.

அதேபோல பன்னீர்செல்வத்தின் மாநாடு நடந்த பொழுது கூட கலந்துக்கொள்ளவில்லை.தற்பொழுதும் ஓபிஎஸ் இவர்களுடன் இணைவது குறித்து சிறிது யோசனை செய்து முடிவெடுக்க வேண்டும் என்பதால் கால அவகாசம் எடுத்துக் கொள்கிறார் என கூறுகின்றனர்.

அதிமுகவின் பன்னீர்செல்வம் செல்லா காசாக ஆன நிலையில் சசிகலாவின் இந்த செயல் அரசியல் சுற்று வட்டாரங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது. ஏனென்றால் சசிகலாவை சந்தித்து ஓபிஎஸ் அவர்கள் பேச வேண்டும் என்று கூறும் போதெல்லாம்  சசிகலா மறைமுகமாக அவரை தவிர்க்கிறாரோ என சந்தேகம் எழுந்துள்ளது.

Previous articleகலைக்கல்லூரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! இவர்களுக்கு கல்வி கட்டணம் இல்லை.. வெளிவந்த ஸ்ட்ரிட் ரூல்!! 
Next articleஏடிஎம் யில் பணம் எடுக்க இது கட்டாயம் வேண்டும்!! அமைச்சர் தங்கம் தென்னரசின் திடீர் நடவடிக்கை!!