சிறுவயதிலேயே இளநரை பிரச்சனையா!! தேங்காய் எண்ணெயுடன் இதை மட்டும் சேருங்கள்!!

0
238
#image_title

சிறுவயதிலேயே இளநரை பிரச்சனையா!! தேங்காய் எண்ணெயுடன் இதை மட்டும் சேருங்கள்!!

தற்போது சிறுவயது இளைஞர்களுக்கே இளநரை பிரச்சினை ஏற்பட்டு விடுகிறது. இதற்காக அவர்கள் மருத்துவர்களை அணுகி அதற்கு உண்டான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர்.

ஆனால் நாம் முந்தைய காலத்தில் பயன்படுத்த வந்த சில பொருட்களை வைத்து இதனை எளிமையாக சரி செய்து விடலாம். அந்த வகையில் இளநரை பிரச்சனை மட்டுமின்றி, முடி உதிர்தல் என அனைத்திற்கும் இந்த ஒரு எண்ணெய் நல்ல தீர்வளிக்கும்.

தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய் 100 ml

ஆமணக்கு எண்ணெய்

வெட்டிவேர் 30 கிராம்

வெந்தயம் இரண்டு ஸ்பூன்

வேம்பாலை பட்டை 4

செய்முறை::

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் கொதிப்பதற்கு முன்னதாகவே மற்றொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் வெட்டிவேர் வெந்தயம் இவை மூன்றையும் கலந்து கொதிக்கும் தண்ணீர் பாத்திரத்திற்கு மேல் வைக்க வேண்டும்.

அதாவது இதனை டபுள் பாய்லிங் மெத்தட் என்று கூறுவர். பின்னர் எண்ணெய் நன்றாக சூடானதும் அதை கீழே இறக்கி வைக்க வேண்டும். பின்பு அதில், வேம்பாலை பட்டையை சேர்க்க வேண்டும்.

வேம்பாலி பட்டை சேர்த்ததும் தேங்காய் எண்ணெயும் நிறம் சற்று மாறும். பின்பு இதனை அப்படியே ஆரவிட்ட விட வேண்டும். ஆறியதும் இதனை வடிகட்டி எடுத்துக்கொண்டு அதனுடன் 25 எம்எல் ஆமணக்கு எண்ணெய் சேர்க்க வேண்டும்.

இளநரையை போக்கும் அற்புதமான எண்ணெய் வீட்டிலேயே தயாராகி விட்டது. இதனை தொடர்ந்து உபயோகப்படுத்தி வர நல்ல மாற்றத்தை காணலாம்.

Previous articleவெள்ளைத் துணிகள் பளிச் பளிச் என மின்ன வேண்டுமா?  இதோ ஒரே ஒரு பொருளை மட்டுமே பயன்படுத்தி ஜொலிக்க வைக்க பலருக்கும் தெரியாத சிம்பிள் ட்ரிக்! 
Next articleகெட்ட கொலஸ்ட்ரால் உயர் இரத்த அழுத்தம் குறைய தொடர்ந்து 2 வாரம் இதை வெறும் வயிற்றில் குடிச்சு பாருங்க!  நீங்களே அசந்து போவீர்கள்!