நடுரோட்டில் 15 கிலோமீட்டர் நிர்வாண போராட்டம்!! அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!!

நடுரோட்டில் 15 கிலோமீட்டர் நிர்வாண போராட்டம்!! அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!!

காற்று மாசுபாடு ஆனது உலக அளவில் பெரும் அளவு பாதிப்பை உண்டாக்கக்கூடியது. அந்த வகையில் இந்த காற்று மாசுபாடு காரணமாக பல்வேறு தரப்பினர் உடல் உபாதைகளை சந்தித்து வருகின்றனர். ஏன் சிறு குழந்தைகளுக்கு கூட ஆரம்ப கட்டத்திலேயே சுவாச கோளாறு பிரச்சனை வந்து விடுகிறது.

குறிப்பாக பெரு நகரங்களில் அதிக அளவு கார் மற்றும் மோட்டார் வண்டிகளை பயன்படுத்துவது இதன் முக்கிய காரணம் என்று கூறலாம். அதுமட்டுமின்றி தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையும் இதற்கு ஒரு காரணம் தான்.

மக்கள் தொகை பெருகத்திற்கு ஏற்ப அதிக அளவு மோட்டார் மற்றும் கார் உபயோகம் அதிகரித்துவிட்டது. அதேபோல இதனை கட்டுப்படுத்த காற்று மாசுபாட்டு கருவியை பொருத்தும் படி பல்வேறு தரப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விட்டது.

ஆனால் எவரும் அதனை முறையாக பின்பற்றுவதாக தெரியவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் காற்று மாசுபாடு தடுக்க பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தி வந்த போதிலும் இது எல்லையை மீறின பாதிப்பை தான் தருகிறது.

அந்த வகையில் மெக்சிகோ அதிக அளவு சுற்றுச்சூழல் பாதிப்பை சந்திக்கிறது என அந்நாட்டை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் போராட்டத்தை கையெடுத்துள்ளனர்.

அந்த வகையில் போராட்டக்காரர்கள் சுற்றுச்சூழலை பாதுகாத்த வண்ணம் இனி அனைவரும் மோட்டார் வண்டிகளுக்கு பதிலாக மிதிவண்டியை பயன்படுத்த வேண்டும் எனக் கூறி தினம்தோறும் அதிக அளவு நெருசலை உண்டாக்கும் சாலையில் நிர்வாணமாக மிதிவண்டி ஓட்டி சென்றுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் நிர்வாணமாக போராட்ட களத்தில் இறங்கியது அங்குள்ளவர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்தப் போராட்டக்காரர்கள் கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டர் அளவிற்கு நிர்வாணம் ஆகவே மிதிவண்டியை ஓட்டி சென்றுள்ளனர்.

இந்த நூதன போராட்டம் ஆனது மெக்சிகோவில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.