மாணவர்களே உங்களுக்குத்தான்!! இவர்களுக்கு இன்று பள்ளிகள் இல்லை!!

0
154
#image_title

மாணவர்களே உங்களுக்குத்தான்!! இவர்களுக்கு இன்று பள்ளிகள் இல்லை!!

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஏப்ரல் மாதத்துடன் பொது தேர்வு முடிவடைந்து அதற்கான முடிவுகளும் வெளியாகிவிட்டது.

அந்த வகையில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்த கட்ட படிப்பிற்கான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கும் தமிழக அரசு பல வழிமுறைகளை செய்துள்ளது.

அதுமட்டுமின்றி பொது தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் துணை தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி அந்த வகையில் தற்பொழுது துணை தேர்வு ஹால் டிக்கெட் ஆனது விநியோகிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் ஒன்றாம் தேதி 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறிய நிலையில் வெயிலின் தாக்கத்தால் ஜூன் 7-ம் தேதியாக மாற்றம் செய்யப்பட்டது.

ஆனால் அப்பொழுதும் வெயிலின் தாக்கம் சிறிது கூட குறையாமல் இருந்ததால் மீண்டும் பள்ளி திறப்பு தேதியில் மாற்றத்தைக் கொண்டு வந்தனர்.

அந்த வகையில் ஆறாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர்.

அதேபோல ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனக் கூறியிருந்தனர்.

எனவே இன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் நடைபெறும் என்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.