வறட்டு இருமல் பிரச்சனையை ஒரு நிமிடத்தில் குணமாக்க உங்களது கட்டை விரல் போதும்!!
வறட்டு இருமல் இருப்பவர்களுக்கு மருந்து மாத்திரைகள் எடுக்காமல் வறட்டு இருமலை சரி செய்ய இந்த பதிவில் அருமையான வைத்திய முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக வறட்டு இருமல் என்பது நம் உடலில் இருக்கும் அதிக சூட்டால் ஏற்படுகின்றது. அவ்வாறு ஏற்படும் இருமலை சரிசெய்ய இரண்டு மிளகை எடுத்து கடித்து தின்றாலே இந்த இருமல் சரியாகும்.
இந்த வறட்டு இருமல் குழந்தைகளுக்கு இருந்தால் இரண்டு மிளகை இடித்து பொடி செய்து தேனில் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட வறட்டு இருமல் குணமாகும். அதிகப்படியான வறட்டு இருமல் உங்களுக்கு இருந்தால் கட்டை விரலை பயன்படுத்தி இதை சரிசெய்யலாம்.
இந்த வைத்தியத்தை செய்யும் முறை;
இதை செய்ய முதலில் வலது கை கட்டை விரலின் வலப்பக்க ஓரத்தில் வைத்து பயன்படுத்தப் போகிறோம். முதலில் ஒரு செல்லோ டேப்பை எடுத்து அதில் இரண்டு மிளகை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை கட்டை விரலின் ஓரத்தில் வைத்து சிறிதளவு அழுத்தம் கொடுக்கும் அளவு ஒட்டிக் கொள்ளவும்.
இவ்வாறு செய்வதால் கட்டை விரலின் மூலம் ஒரு அழுத்தம் ஏற்பட்டு அந்த அழுத்தம் மூலமாக நமக்கு இருக்கும் வறட்டு இருமல் குணமடையும். குழந்தைகளாக இருந்தால் 10 நிமிடமும் பெரியவர்களாக இருந்தால் அரை மணி நேரமும் ஒட்டி வைக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து இந்த செல்லோ டேப்பை எடுத்து தூக்கி போட்டு விடலாம். அடுத்த முறை உங்களுக்கு வறட்டு இருமல் ஏற்பட்டால் மருந்து மாத்திரைகள் பயன்படுத்தாமல் இந்த வைத்தியத்தை பயன்படுத்தி வறட்டு இருமலை குணப்படுத்தலாம்.