கரோனா வைரஸால் பயப்பட வேண்டாம்; விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்! அன்புமணி ஆலோசனை!!

0
164

கரோனா வைரஸால் பயப்பட வேண்டாம்; விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்! அன்புமணி ஆலோசனை!!

கரோனா வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டாம், நிதானமும் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம் என்று பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி அறிவுறுத்தியுள்ளார்.

சீனாவின் வூகான் பகுதியில் உருவான கரோனா வைரஸ் இதுவரை 3000 பேரை பலிவாங்கியுள்ளது. சீனாவின் அண்டை நாடுகளான இங்கிலாந்து, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா போன்ற நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அண்டை நாடுகளில் மட்டுமே பரவியிருந்த வைரஸ் தற்போது சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளை கடந்து இந்தியாவின் ஆந்திர மாநிலம், கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலிங்களிலும் பதம் பார்த்து வருகிறது.

இதுவரை இந்தியாவில் மட்டுமே 28 பேர் கரோனா வைரஸ் நோயின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதை மத்திய சுகாதார அமைச்சகம் உறுத்திபடுத்தியுள்ளது, இதனால் பொதுமக்கள் வைரஸ் குறித்த அச்சத்தில் தன்னை பாதுகாத்து வருகின்றனர்.தினமும் சுத்தமாக இருப்பதாலும், விழிப்புடனும் இருந்தால் இதில் இருந்து தப்பிக்கலாம்.

இந்த பாதிப்பினால் சீனாவில் மட்டுமள 80,270 பேர், தென்கொரியாவில் 5,328 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலில் 3,190 பேர் பலியாகியுள்ளனர். இதில் 2,981 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் பெரும் பாதிப்பு இல்லை எனலாம். உலகின் அதிக மக்கள் தொகையும், சுகாதாரமில்லாத பொது இடங்களும் இந்தியாவில் அதிகம் இருப்பதால் இந்திய மக்களும் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்.

கரோனா வைரஸின் அறிகுறிகள் :

இந்த வரைஸ் தாக்கிய உடன் காய்ச்சல், இருமல், சளி, மூச்சு விடுவதில் சிரமம் அதிகமாக இருக்கும். உடலை தாக்கிய இரண்டு வாரங்களில் இவை அதிகமாகலாம் ஆகவே இந்த அறிகுறி இரு தனியாக இருப்பதும், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவதும் மிக அவசியமானது.

கரோனா வைரஸில் இருந்து இதுவரை 44,000 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மற்றவர்களின் உடல்நலமும் தேறி வருவதாக கூறப்படுகிறது. கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த மூவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முழுமையான குணம் அடைந்தவுடன் சவுதிக்கு வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளனர்.

கரோனா வைரஸ் குறித்து பல்வேறு வதந்திகளும், மிகைப்படுத்தப்பட்ட தகவலும் பொதுமக்களிடையே தேவையற்று பரப்பப் படுகிறது. இதனை தவிர்க்க சில நடவடிக்கைகளை கையாள வேண்டும். பொதுவான மருத்துவ அறிவுரை மற்றும் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கூடங்களுக்காக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவுரைகளை அனைத்து பள்ளி மாணவர்களும் கடைபிடிக்க வேண்டும், அதை அரசும் உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.

Previous articleசந்தானத்தின் வித்தியாசமான லுக்கில் பிஸ்கோத் போஸ்டர் !
Next articleதிமுகவின் “தமிழ் மக்கு” போஸ்டர்! ஆக இப்படித்தான் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதா..? இணையத்தில் விமர்சனம்