திடீரென்று வெடித்த ஸ்மார்ட் போன்!! தீயில் கருகிய ஆபிசர்!!

Photo of author

By Preethi

திடீரென்று வெடித்த ஸ்மார்ட் போன்!! தீயில் கருகிய ஆபிசர்!!

இசக்கியப்பன் என்பவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில்  உள்ள தலைவன்வடலி கிராமத்தில் வசித்து வந்தார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்வர் காப்பீட்டுத்திட்டதில்  ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வந்தார். தனது உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் அவர் சாப்பிட்டுக்கொண்டே தனது உறவினரிடம் பேசியுள்ளார்.அப்போது அவர் வைத்து இருந்த ஐ டெல் என்ற ஸ்மார்ட் போன் திடீரென அதிக சத்தத்துடன் பயங்கரமாக வெடித்து சிதறியது.

போன் வெடித்து சட்டையில்  தீப்பற்றியதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து தீயை அணைக்க முயன்றார்கள். ஆனால் தீ வேகமாக பரவி அவர் இடது மார்பு, தாடை மற்றும் முகம் போன்ற இடங்களுக்கு தீ பரவியது. இதனால் அவர் முகம் தீயில் கருகியது.

உடனடியாக  உறவினர்கள் தீயை அணைத்து  பக்கத்தில் உள்ள காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சையை மருத்துவர்கள்  அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணையின் போது வெடித்த அந்த ஸ்மார்ட் போன் மூன்று  ஆண்டுகளுக்கு   முன்பு வாங்கப்பட்ட போன் எனவும் தெரியவந்துள்ளது. இசக்கியப்பன் போனை இரவு முழுவதும் சார்ஜ் போட்டுவிட்டு காலையில் அதனை எடுத்து பாக்கட்டில் வைத்துள்ளார். அப்போதுதான் போன் வெடித்துள்ளது என்று தெரியவந்துள்ளது.

இதற்கு காரணம்  இரவு அதிக நேரம் சார்ஜ் போட்டதால் தான் போன் வெடித்திருக்கும் என போலீசுக்கு  சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த ஐ டெல் ஸ்மார்ட் போன் இந்திய தயாரிப்பாகும். அதில் உள்ள பாகங்கள் சீனா, கொரியா  போன்ற நாடுகளின் தயாரிப்புகள் ஆகும்.

எந்த ஒரு ஸ்மார்ட் போனாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரம் மட்டும் சார்ஜ் செய்ய வேண்டும். இந்த சம்பவம் போன்று ஏற்கனவே கேரளாவிலும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.