லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்!! வாகன ஓட்டிகள் அவதி!!
தமிழகம் முழுவதும் 145 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ள நிலையில் சென்னையில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் 14 போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளது.
இதில் இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் கார் ஆகிவற்றிற்கு தினமும் உரிமம் பெற வருபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு அலுவலகத்திலும் தினமும் லைசென்ஸ் பெற விண்ணப்பிக்க வருபவரின் எண்ணிக்கை 100-ஆக உள்ளது. இதனால் லைசென்ஸ் –ற்கு விண்ணப்பிக்க ஆன்லைன் முறையை கொண்டு வந்து அதில் நாள் ஒன்றுக்கு 50 ஆக ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கான பணியை நிக் என்ற நிறுவனம் அதன் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தினமும் செய்து வருகிறது. ஒரு நாளில் காருக்கு பதினைந்து நபர்களும், இரு சக்கர வாகனங்களில் கியர் மற்றும் கியர் இல்லாத வாகனங்களுக்கு இருபது மற்றும் பதினைந்து என்ற எண்ணிக்கையில் மொத்தமாக ஐம்பது நபர்களுக்கு தினமும் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதால் காலை 6 மணிக்கே ஐம்பது ஒதுக்கீடுகளும் முடிந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் ஏமாற்றம் அடைகின்றன.
இதனால் பூந்தமல்லி மற்றும் மீனம்பாக்கம் பகுதியில் எம்பது, எழுபது என்று ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் அலுவலகத்திற்கு உட்பட்டு 35 டிரைவிங் பயிற்சி பள்ளிகள் உள்ளது.
இதில் நாள் ஒன்றுக்கு 50 நபர்களுக்கு மட்டுமே லைசென்ஸ் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பம் கிடைக்காமல் தினந்தோறும் ஏராளமான மக்கள் ஏமாந்து செல்கின்றன.
இதில் பாதிக்கப்பட்ட ஒருவர் கூறியதாவது, நான் டிரைவிங் பள்ளியில் பயிற்சி பெற்று எல்.எல்.ஆர்.-க்கு விண்ணப்பித்து செவ்வாய் கிழமையுடன் இதன் அவகாசம் முடிகிறது என்றும், ஆன்லைனில் பலமுறை விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை என்றும் கூறி உள்ளார்.
இந்த பிரச்சனைக்கு அரசு தீர்வு சொல்ல வேண்டும் என்றும் இவர் கூறி உள்ளார்.