வேளாண் பட்டப்படிப்பு பயில விரும்பும் மாணவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான சூப்பரான அறிவிப்பு!! 

வேளாண் பட்டப்படிப்பு பயில விரும்பும் மாணவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான சூப்பரான அறிவிப்பு!! 

தமிழகத்தில் வேளாண் படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் பிளஸ் டூ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அடுத்து வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு மேல்படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பித்தனர். மருத்துவம், கலை மற்றும் அறிவியல், பொறியியல், வேளாண்மை, படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.

இதில் தற்போது  தமிழகத்தில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பு ஆண்டில்   வேளாண்மை படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு அதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 14 பட்டப்படிப்புகள் மற்றும் 3 பட்டைய படிப்புகளில் சேர்வதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தன.

இதனை அடுத்து  இந்த ஆண்டுக்காண மாணவர் சேர்க்கைக்கு  கடந்த மே மாதம் 10ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில்  ஜூன் 9-ஆ ம் தேதி வரை இணையதளம் மூலம் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு  வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று  வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தரவரிசை பட்டியல் www.tnau.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்களை பல்கலை வலைத்தளப் பக்கத்தில் சென்று அறிந்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.