கொய்யா பழத்தை இப்படி சாப்பிட்டால் நம் உயிரே போய்விடும்!! மக்களே எச்சரிக்கை!!
கொய்யா பழம் பல நன்மைகளை கொண்டுள்ளது என்று நாம் தாராளமாக சாப்பிடுவோம். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப எந்த ஒரு பொருளையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் அது நஞ்சாக மாறிவிடும்.
அதைப் போலத்தான் கொய்யாப் பழத்தில் எந்த அளவுக்கு நன்மைகள் உள்ளதோ அதே அளவுக்கு தீமைகளும் உள்ளது. இந்த கொய்யா பழத்தின் என்னென்ன தீமைகள் உள்ளது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கொய்யாப் பழத்தில் உள்ள தீமைகள்…
* விளைச்சல் நிலங்களில் ஏற்படும் பாக்டீரியாக்கலால் பாதிக்கப்படும் பழங்களில் கொய்யாப் பழமும் ஒன்று. இந்த கொய்யாப் பழத்தை கழுவாமல் அப்படியே சாப்பிடுவதால் அதில் இருக்கும் பாக்டீரியாக்களால் நமக்கு டயேரியா நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
* கொய்யாப்பழத்தை கழுவாமல் அப்படியே சாப்பிட்டால் வயிற்று போக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.
* பழத்தின்.தோல்கள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் பாக்டீரியாக்கள் பழத்தினுள் சென்று விடும். இதனால் கொய்யாப் பழங்களை அளவோடு சாப்பிட வேண்டும்.
* இந்த கொய்யாப் பழத்தை அதிகமாக சாப்பிடும் பொழுது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
* கொய்யா பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பொழுது எரிச்சலுடன் கூடிய குடல் நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கும்.
* கொய்யாப் பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பொழுது பித்தம் தலைக்கு ஏறி வாந்தி மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
* கொய்யாப் பழத்தை சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடித்தால் தொண்டை வலி ஏற்படும்.
* நாம் உணவு உண்பதற்கு முன் கொய்யாப் பழத்தை சாப்பிடக்கூடாது. உணவு சாப்பிட்டு முடித்த பிறகு இரண்டு மணி நேரம் கழித்து தான் கொய்யா பழத்தை சாப்பிட வேண்டும்.
* கொய்யாப் பழத்தை இரவு நேரத்தில் சாப்பிட்டால் வயிறு வலி ஏற்படும்.