தளபதி விஜய்யின் அரசியல் எண்ட்ரி!! பதிலளித்த சீமான்!! 

0
256
Seeman spoke about Thalapathy Vijay's political entry!!
Seeman spoke about Thalapathy Vijay's political entry!!

தளபதி விஜய்யின் அரசியல் எண்ட்ரி!! பதிலளித்த சீமான்!! 

தளபதி விஜய் வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். இவரின் திரைப்படங்கள் அனைத்தும் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைகிறது.அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மக்களுக்கு பல நல திட்டங்களை செய்து வருகிறார். இத்துடன் இவர் தனது அன்பான ரசிகர்களை சந்தித்து வருவதிலும் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்.

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நேற்று முன் தினம் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் உள்ள  10 மற்றும்  12 ஆம் வகுப்பை சேர்ந்த முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்தித்தார். வருகை புரிந்த ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் தளபதி விஜய் சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி அவர்களுடைய குடும்பத்தினருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அதனுடன் தமிழகத்தில் 12 ம் வகுப்பில்  முதல் மதிப்பெண் பெற்ற நந்தினி என்கின்ற மாணவிக்கு தளபதி விஜய் வைர நகை கொடுத்து சால்வை அணிவித்து  சான்றிதல் வழங்கினார். இந்த நிகழ்ச்சி நேற்று முன் தினம் சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது.

பின்பு அது குறித்து பேசிய தளபதி விஜய் ஓட்டிற்கு பணம் வாங்க கூடாது என்று ஒவ்வொரு மாணவ மாணவியரும் தனது பெற்றோருக்கு புரிய வைக்க வேண்டும் என்றும் நாளைய தலைவர்களை தீர்மானிப்பவர்கள் நீங்கள் தான் என்று பல கருத்துக்களை அவர்களுக்கு கூறினார்.

இதன் தொடர்பாக பலரும் பல கருத்துகளை தெரிவிக்கின்றனர். இதேபோல் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்யின் செயல்பாடுகள் அனைத்தும்  அரசியலுக்கு அவர் வருவதற்கான முயற்சியாகவே இருக்கிறது என்று தெரிவித்தார்.

பின்னர் நிருபர் சீமானிடம் தளபதி விஜய் அரசியலுக்கு வந்தால் நீங்கள் ஆதரிப்பீர்களா என்று கேட்டதற்கு அவர் நான் யாரையும் ஆதரிக்க முடியாது என்றும் நாங்கள் தனித்து போராடுகிறோம் எங்களுக்கு என்று ஒரு கனவு உள்ளது அதனை நோக்கி செல்கிறோம் என்றும் கூறினார்.

சீமான்  விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் பேசினார்.

Previous articleதிடீரென சாகும் மக்கள் உயர்ந்து வரும் வெப்பம் காரணமா? மருத்துவர்களின் பதில்!!
Next articleபெண் மருத்துவருக்கு கற்பழிப்பு மிரட்டல்!! மிரட்டல் விடுத்த நோயாளியை கைது செய்த காவல்துறையினர்!!