பெண் மருத்துவருக்கு கற்பழிப்பு மிரட்டல்!! போலீசாரின் அதிரடி நடவடிக்கை!!
கேரளா அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் பெண் மருத்துவருக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்துள்ளார்.இதையடுத்து அந்த பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் மிரட்டல் விடுத்த நோயாளியை கைது செய்தனர்.
கேரளாவின் கோட்டயத்தை அடுத்து தொட்டக்கராவில் அரசு மருத்துவமனை உள்ளது. அந்த அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் பணியில் இருந்த பெண் மருத்துவர் வந்தனா தாஸ் அவர்களை கத்தரிக் கோலால் குத்தி கொலை செய்தார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆன நிலையில் கேரளா அரசு மருத்துவமனை ஒன்றில் பெண் மருத்துவருக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்த நோயாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து காந்தி நகரில் இருக்கும் காவல் நிலையத்தில் உதவியாளரை அனுப்பி அந்த பெண் மருத்துவர் புகார் கொடுத்துள்ளார்.இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர் கற்பழிப்பு மிரட்டல் விடுத்த நோயாளியை அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து அந்த பெண் மருத்துவர் “நள்ளிரவு 2 மணியளவில் காவலர்கள் விபத்தில் படுகாயம் அடைந்த நோயாளியை சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அவரை நான் பரிசோதித்து சிகிச்சை அளிக்கும் பொழுது அந்த நோயாளி என்னை தகாத வார்த்தைளால் திட்டினார்.மேலும் என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிடுவதாக மிரட்டினார்.
இதனால் அதிர்ந்து போனேன். இதையடுத்து எனது உதவியாளர் அருகில் இருக்கும் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்து புகார் அளித்தேன். காவல்துறையினர் புகாரின் அடிப்படையில் மருத்துவமனைக்கு வந்து மீண்டும் அந்த நோயாளியை அழைத்துச் சென்றனர்.அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
கேரளாவில் பெண் மருத்துவர் வந்தானா தாஸ் அவர்களின் கொலைக்கு பின்னர் பெண் மருத்துவர்களுக்கு மிரட்டல் விடுவது அதிகரித்த நிலையில் மிரட்டல் விடும் நபர்களை கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று அரசு அறிவித்திருந்தது.மேலும் அரசு மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்திலும் திருத்தம் கொண்டு வந்தது.
இதற்கு பின்னரும் கேரளாவில் சில அரசு மருத்துவமனைகளில் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றது. தற்போது பெண் மருத்துவருக்கு நோயாளி ஒருவர் கற்பழிப்பு மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது