இளைஞர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!! இனி உங்கள் ஊரிலும் வந்துவிட்டது!!

0
199
Guys don't miss this!! Now it has arrived in your city!!
Guys don't miss this!! Now it has arrived in your city!!

இளைஞர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!! இனி உங்கள் ஊரிலும் வந்துவிட்டது!!

தமிழகத்தில் வேலையில்லாமல் பல இளைஞர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை பலரும் செய்து வருகின்றனர்.
எனவே படித்த இளைஞர்கள் பலன் பெரும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டு பணி ஆணைகளும் பெற்று வருகின்றனர். சென்ற வாரத்தில் கூட திருவண்ணாமலையில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று பல்வேறு இளைஞர்களும் இதில் பயன் பெற்றனர்.

அந்த வகையில் தற்போது இந்த வேலைவாய்ப்பு முகாம் வருகிற 23 –ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. எனவே அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமை சென்னையில் நடத்த உள்ளன.

இதில் பல்வேறு தனியார் நிறுவங்களும் கலந்து கொள்ள இருக்கிறது. சென்னையில் உள்ள கிண்டியில் ஆலந்தூர் சாலையில் இருக்கின்ற ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது காலை 10 மணியளவில் துவங்கி மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பில்  எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் பட்டம் முடித்தவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள கட்டணம் எதுவும் கிடையாது. இது முழுக்க முழுக்க இலவசம். இந்த முகாமில் கலந்து கொள்ள ஆர்வம் உடையவர்கள் தங்கள் முகவரிகளை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து இதில் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Previous articleபொதுமக்களுக்கு சுகாதார துறையின் எச்சரிக்கை!! தொடர்மழையை தொடர்ந்து வரும் அடுத்த ஆபத்து!! 
Next articleஅத்துமீறி கல்குவாரிக்குள் நுழைந்த சீமான்! நடந்தது என்ன!