டூவீலர் வைத்திருக்கிறீர்களா!! பெட்ரோல் செலவை மிச்சப்படுத்த கட்டாயம் இதை செய்யுங்கள்!!
நம் இருசக்கர வாகனம் எந்த பிரச்சினையும் இல்லாமல், செலவு செய்யாமல், மெக்கானிக் ஷாப்பிற்கு போகாமல், மைலேஜ் -அயும் அதிகமாக தர இந்த மூன்று எளிய வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
முதலில் நம் வாகனத்தில் உள்ள இன்ஜினில் எண்ணெய் அளவு சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும்.
அவ்வாறு அதில் எண்ணெய் இல்லை என்றால் வண்டியில் பிரச்சனை ஏற்பட்டு செலவு செய்யக்கூடும்.எனவே அடிக்கடி இன்ஜின் ஆயிலை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
2000 கிலோ மீட்டருக்கு ஒருமுறை இந்த இன்ஜின் ஆயிலை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஆயிலை மாற்றவில்லை என்றால் இன்ஜின் சூடாகி மைலேஜ் குறைவாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இரண்டாவது வண்டியில் உள்ள காற்று வடிகட்டியையும், ஸ்பார்க் பிளக்கையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.இல்லையென்றால் இருசக்கர வாகனம் பழுதாகும் நிலை ஏற்படலாம்.
அது மிகவும் பழையதாகிவிட்டால் உடனடியாக மாற்ற வேண்டும் இல்லை என்றால் சரியாக மைலேஜ் தராமல் பெரிய பிரச்சனையில் முடிந்து விடும்.
வண்டியில் உள்ள அந்த செயினை அடிக்கடி சுத்தம் செய்து மாட்ட வேண்டும் இல்லை என்றால் அது மிகவும் இறுக்கமாகி விடும். பின்னர் வண்டியில் பிரச்சனையை ஏற்படுத்தி விடும்.