தினமும் குளிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை!! கட்டாயம் இந்த மூன்று உறுப்பை மட்டும் சுத்தம் பண்ணுங்க!!

0
221
#image_title

தினமும் குளிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை!! கட்டாயம் இந்த மூன்று உறுப்பை மட்டும் சுத்தம் பண்ணுங்க!!

நம்மல் பலர் குளிக்கும் விஷயத்தில் பலவிதங்களில் இருக்கின்றோம். ஒரு சிலர் தினமும் குளிப்பார்கள். ஒரு சிலர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். இன்னும் ஒரு சிலர் குளிப்பதற்கு சங்கடப்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என்றும் குளிப்பார்கள்.

 

இவர்களில் தினமும் குளிப்பவர்களை விட தினமும் குளிக்காமல் இருக்கும் நபர்களுக்கு இந்த பதிவு அதிகளவு பொருந்தும். நீங்கள் தினமும் குளிக்கவில்லை என்றாலும் இந்த மூன்று உறுப்புகளை நீங்கள் கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும். இல்லை என்றால் உங்களுக்கு பெரிய ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தினமும் குளிக்காமல் இருந்தாலும் சுத்தம் செய்யப்பட வேண்டிய அந்த உறுப்புகள் எவை, அந்த உறுப்புகளை எவ்வாறு சுத்தம் செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

தினுமும் குளிப்பதும் குளிக்காமல் இருப்பதும் அவர் அவர்களின் அவர்களின் விருப்பம் ஆகும். உடல் சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் தினமும் குளிக்க வேண்டும். தினமும் குளிப்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.

 

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் அதிகமாக குளித்தால் நமது சருமம் வறண்டு விடும். சருமத்தில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். தோலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் வெளியேறுவதால் அரிப்பு போன்ற தோல் நோய்கள் ஏற்படும்.

 

நீங்கள் தினமும் குளிக்க வேண்டுமா அல்லது குளிக்க வேண்டாமா என்பதை நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நாம் குளிக்காமல் இருந்தாலும் இந்த மூன்று உறுப்புகளை சுத்தம் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

 

சுத்தம் செய்யப்பட வேண்டிய அந்த மூன்று உறுப்புகள்…

 

* அக்குள் பகுதி

* இடுப்புப் பகுதி

* பாதங்கள்

 

1. நம் உடலில் அதிகமாக வியர்க்கும் பொழுது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்கள் வெளியேறி சருமத்தில் ஒரு விதமான கெட்ட வாசத்தை ஏற்படுத்தும். அக்குள் போன்ற தோல் மடிப்பு பகுதிகளில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். இதனால் அக்குள்களில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி அரிப்பு எரிச்சல் போன்ற தோல் நோயை ஏற்படுத்துகின்றது. இதை சரி செய்ய தினமும் சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்தி உங்கள் அக்குள்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால் அக்குள்களில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டுகின்றது. சருமம் பாதுகாக்கப்படுவதோடு நல்ல வாசத்தையும் இது அளிக்கும்.

 

2. நாம் தினமும் குளிக்கவில்லை என்றாலும் நமது இடுப்புப் பகுதியை நாம் சுத்தம் செய்ய வேண்டும். இடுப்புப் பகுதியை சுத்தம் செய்துவிட்டு நாம் தினமும் உள்ளாடைகளை மாற்ற வேண்டும். இடுப்பில் உள்ள மடிப்புகள் மற்றும் பிறப்புறுப்பை சுற்றியுள்ள முடிகளில் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்கள் உள்ளது. இது நோய்த் தொற்று மற்றும் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும். இதனால் உங்களின் அந்தரங்க உறுப்புக்களை தினமும் வெதுவெதுப்பான நீரினாலும் சோப்பினாலும் சுத்தம் செய்ய வேண்டும். இதன் முலமாக நமது சருமத்தை மென்மையாகவும், வியர்வை இல்லாமலும் வைத்துக் கொள்ள முடியும்.

 

3. நமது உடலில் புறக்கணிக்கப்பட்ட உறுப்புகளில் பாதங்களும் ஒன்று. மக்கள் குளிக்கும் பொழுது பொதுவாக உடலில் உள்ள மற்ற உறுப்புகளை சுத்தம் செய்து குளிக்கின்றனர். ஆனால் பாதங்களுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் நமது பாதங்களுக்குத்தான் அதிக கவனம் தேவைப்படுகின்றது. நமது பாதங்கள் நம் உடலில் ஏற்படும் வியர்வையை குடிக்கும் பகுதியாகும். நாள் முழுவதும் சாக்ஸ் அணியும் நபர்கள் என்றால் அவர்கள் அனைவரும் பாதங்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு சுத்தம் செய்வதால் துர்நாற்றம் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.

 

இந்த மூன்று உறுப்புகளைத் தவிர மேலும் சில உறுப்பகளுக்கு நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவை விரல் நகங்களுக்கு கீழ் உள்ள பகுதி, காதுகளுக்கு பின்புறம் உள்ள பகுதி, தொப்பை பெத்தான், கழுத்துகளுக்கு கீழ் பின்புறம் உள்ள பகுதி ஆகியவை ஆகும். இந்த உறுப்புகளுக்கும் நாம் குளிக்கும் பொழுது அதிக கவனம் செலுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.

 

நம் உடலில் 80 வகையான பூஞ்சைகள் 1000 வகையான பாக்டீரியாக்களுடன் நம் தோலில் இருக்கின்றது. இந்த பாக்டீரியாக்களில் நமக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருந்தாலும் நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்களும் இருக்கின்றது.

 

இந்த நல்ல பாக்டீரியாக்கள் நமது உடலில் இருக்கும் தீங்கு செய்யக்கூடிய பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவுகின்றது. மேலும் சருமப் பிரச்சனைகள் வராமல் தடுக்கவும் உதவியாக உள்ளது.

 

குளியல் என்பது உடலில் தோலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை வெளியேற்றுவதற்கு சிறந்த முறையாக உள்ளது. நீங்கள் தொடர்ந்து குளிக்காமல் இருந்து பின்னர் உங்கள் வாய், கண், மூக்கு ஆகிய உறுப்புகளை கைகளால் தொட்டால் கிருமிகள் எளிதாக நம் உடலுக்குள் சென்று நோய்த் தொற்றை ஏற்படுத்தும். நீங்கள் தினமும் குளிக்காமல் இருந்தால் உங்களுக்கு அரிப்பு போன்ற தோல் தொடர்பான பிரச்சனைகள் வரும்.

 

எனவே தினமும் குளித்து தோல் நோய் தொற்றுகள் இல்லாமல் நிம்மதியாக இருங்கள். தினமும் குளிக்க முடியவில்லை என்றாலும் விருப்பம் இல்லை என்றாலும் இந்த பதிவில் சொல்லப்பட்ட அந்த உறுப்புகளை மட்டும் சுத்தம் செய்து நீங்களும் நோய் தொற்றுகள் இல்லாமல் இருங்கள்.

Previous articleஇந்த ஒன்று மட்டும் பயன்படுத்துங்க.. முகப்பருக்கள் தழும்புகள் உடனே மறையும்!!
Next articleநாய் கடித்தால் நாய் மாதிரியே குறைப்பார்களா!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!!