நாய் கடித்தால் நாய் மாதிரியே குறைப்பார்களா!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!!

0
176
#image_title

நாய் கடித்தால் நாய் மாதிரியே குறைப்பார்களா!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!!

நாய் கடித்தால் தண்ணீரை கூட பார்த்தால் பயப்படுவார்கள் என்று கூறினால் நம்மால் நம்ம முடியுமா ஆனால் அதுதான் உண்மை.

நாய் கடித்து ரேபிஸ் என்ற நோய் பரவினால் தண்ணீர் காற்று போன்ற அனைத்தையும் பார்த்து பயப்படுவார்கள். இது ஒரு கட்டத்தை தாண்டி விட்டாள் இந்த நோய்வாய் பட்ட வரை காப்பாற்றுவது மிகவும் கடினம்.

இந்த நோயின் மூலம் ஒரு வருடத்திற்கு 80 ஆயிரம் பேர் இறக்கின்றனர். இது குறிப்பாக 5 முதல் 14 வயதுள்ள குழந்தைகளையே அதிக அளவு பாதிக்கிறது.

ஒரு ரேபிஸ் வந்த நாயை எப்படி கண்டுபிடிப்பது என்றும் அந்த நோய் வராமல் எப்படி தடுக்க வேண்டும் என்றும் நோய் ஏற்பட்டவுடன் ஏன் இந்த அறிகுறிகள் எல்லாம் ஏற்படுகிறது என்றும் பார்க்கலாம்.

ஒரு நாய்க்கு ரேபிஸ் இருக்கிறது என்றால் அது அதிக அளவில் எச்சிலை சுரக்கும் மற்றும் அதன் உடம்பில் காயங்கள் இருக்கும்.

இவ்வாறு இருக்கும் நாய் உங்களை கடித்து விட்டது என்றால் அதன் காயங்களுக்கு ஏற்ப ராபிஸ் நோய் பரவத் தொடங்கும்.

இது முதல் மூன்று மாதங்களுக்கு எந்தவித அறிகுறியும் வெளிப்படாது. இதனை WHO மூன்று கேட்டகிரியாக பிரித்துள்ளது.

1; ரேபிஸ் வந்த நாயை தொடுகிறீர்கள் என்றால் எந்த பிரச்சனையும் இல்லை.

2: நோய் உண்டான நாய் நம்மை கீறினாலோ அல்லது கடித்துவிட்டாலோ நாம் உடனடியாக மருத்துவரிடம் சென்று அணுக வேண்டும்.

3: நோய்வாய்ப்பட்ட அந்த நாய் நம்மை கடித்து ரத்தம் வந்தாலும் அல்லது வேறு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டாலோ கட்டாயம் நமக்கு ரேபிஸ் வர அதிகளவு வாய்ப்புண்டு.

அறிகுறிகள்

1: முதலில் PNS பாதிக்கப்படும். மூளையில் உள்ள நரம்புகள் அனைத்தும் பாதிக்கப்படும்.

2: காய்ச்சல் வரும்,உடல் வலி ஏற்படும் உடம்புகள் அனைத்தும் குத்துவது போன்று இருக்கும்.

3: அவர்களின் தொண்டை பகுதி பாதிக்கப்படுவதால் அவர்களால் தண்ணீர் கூட கொடுக்க முடியாது.

4: அடுத்தபடியாக அவர்கள் கோமாவிற்கு சென்று இறக்கக்கூடிய நிலையும் ஏற்படும்.

இந்த நோய் வருவதை எப்படி தடுக்க வேண்டும் என்றால் நாய்கள் வளர்ப்பவர்களோ அல்லது அதனுடன் இருப்பவர்களும் கட்டாயம் ரேபிஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.

முதல் தடுப்பூசியை போட்ட பின்பு அப்படியே விட்டு விடக் கூடாது அடுத்து மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அனைத்து டோஸ்களையும் கட்டாயம் போட வேண்டும்.

author avatar
Parthipan K