ஹோலி பண்டிகை கொண்டாட தடை!! கலாச்சாரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதால் அதிரடி உத்தரவு!!
இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஹோலியும் ஒன்றாக உள்ளது. இந்தப் பண்டிகை மார்ச் மாதம் இந்துக்களால் கொண்டாடப்படும்.
இப்பண்டிகையின் பின்னணியில் விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து இரணிய வதம் புரிந்ததை குறிப்பிடும் வகையில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகை மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தென் இந்தியாவை விட வட இந்தியாவில் இப்பண்டிகை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் பண்டிகையில் மக்கள் ஏழை, பணக்காரன் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி மகிழ்ச்சியாக தனது அனைத்து கஷ்டங்களையும் மறந்து விளையாடி வருவார்கள்.
அந்த வகையில் பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் க்வாய்ட்-இ-அசாம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கடந்த 12 ஆம் தேதி ஹோலி கொண்டாடினர்.
மாணவர்கள் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை வீசி மகிழ்ந்தனர். இது சம்மந்தமான வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் திடீரென ஹோலி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் உயர்கல்வி ஆணையம் பிறப்பித்த உத்தரவில், இஸ்லாமியத்தின் கலாச்சாரத்தை நிலைநிறுத்தும் வகையில் மாணவர்களை மாற்றுவதில் உயர்கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும், இஸ்லாமிய அடையாளத்தை பாதிக்கும் வகையில் மாணவர்கள் ஹோலி கொண்டாடுவதை பார்ப்பதற்கு வருத்தமாக உள்ளது என்றும் தெரிவித்திருந்தனர்.
இது நாட்டின் நற்பெயருக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே ,மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறி ஹோலி பண்டிகையை தடை செய்துள்ளனர். பாகிஸ்தான் உயர்கல்வி ஆணையத்தின் இந்த அறிவிப்பு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.