தோண்ட..தோண்ட..புதையல்!! சிவபுரீஸ்வரர் கோவிலில் கிடைத்த அதிசயம்!!
தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான சிவபுரீஸ்வரர் கோவில் கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே அமைந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிவபுரீஸ்வரர் கோவிலும் ஒன்றாகும்.
இதற்கு ஏராளாமான சிவ பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் 29 ஆயிரம் சுருணை ஏடுகள் ராஜகோபுரத்தில் அறநிலையத்துறையின் சுவடிகள் நூலாக்கத் திட்டப்பணி குழுவால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் நிறைய கோவில்கள் உள்ளன. இதில் உள்ள ஓலைச்சுவடிகளை பாதுகாக்க, நூலாக்க திட்ட பணிக்காக 12 பேர் கொண்ட குழு உள்ளது.
இக்குழுவினர் இதுவரையில் 282 கோவில்களில் கள ஆய்வு செய்து நிறைய சுருணை ஓலைகளையும், தங்க ஏடுகளையும், வெள்ளி ஏடுகளையும் கண்டுப்பிடித்து வருகின்றனர்.
அந்த வகையில் சிவபுரீஸ்வரர் கோவிலில் திட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும், ஆய்வாளர்களும் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோவிலில் உள்ள இரண்டாவது தளத்தில் எடுக்க எடுக்க புதையலாக வந்துக்கொண்டிருக்கும் சுருணை ஏடுகளை கண்டறிந்துள்ளனர்.
இந்த சுருணை ஏடுகளை செய்தியாளரின் பார்வைக்கு சமர்பித்த திட்டக்குழுவினர் இந்த ஓலைச்சுவடிகள் மிக முக்கியமானவை என்று கூறி உள்ளனர்.
இந்த ஏடுகளில் சிவபுரீஸ்வரர் கோவில் பற்றிய பல தகவல்கள் இருக்கின்றன. மேலும் இதில் சொத்து விவரம், கோவில் வரவு செலவு கணக்கு விவரம், பண்டாரக் குறிப்புகள், நில குத்தகை முறைகள், நில தானம், பூசை முறை, அந்த காலத்தில் இருந்து வந்த நடைமுறைகள் என பல தகவல்கள் உள்ளன.
இவ்வாறு பல தகவல்கள் இந்த சுருணை ஏடுகளில் உள்ள நிலையில் இதை முழுவதுமாக ஆராய்ந்து பார்த்தால் சிவாயம் சிவபுரீஸ்வரர் கோவிலின் பல வரலாற்று செய்திகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.