தமிழ்நாட்டில் அடுத்த தலைமை செயலாளர் யார்?? வெளியான புதிய அறிவிப்பு!!

Photo of author

By Parthipan K

தமிழ்நாட்டில் அடுத்த தலைமை செயலாளர் யார்?? வெளியான புதிய அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் தலைமை செயலாளரான இறையன்புவின் பதவிக்காலம் தற்பொழுது ஜூன் 30 ம் தேதியுடன் முடிவடைகின்றது. அதனையடுத்து முதலமைச்சர் புதிய தலைமை செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனையை இன்று நடத்துகின்றார்.

தமிழ்நாட்டில் தற்பொழுது இருக்கும் தலைமை செயலாளரான   இறையன்புவின் பதிவிக்கலாம் முடிவடைய உள்ளது. அதனால் அடுத்த தலைமை செயலாளரை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரமாக தொடங்கியுள்ளது.

இன்று முதலமைச்சர் ஸ்டாலின் புதிய செயலாளரை தேர்ந்தெடுக்கும் ஆலோசனையை சென்னை தலைமையகத்தில்  நடத்தி வருகின்றார். இந்த ஆலோசனையில் மூன்று பேரின்  பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதில் முதலீட்டுக் கழகத்தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா,வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் சிவதாஸ் மீனா ஆகிய மூவருக்கும் இடையே  போட்டி நிலவுவதாகவும் கூறப்பட்டு வருகின்றது.

இதில் நிர்வாகத் துறை செயலாளர் சிவதாஸ் மீனா அடுத்த  தலைமை செயலாளராக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டு வருகின்றது. இவரின் ஓய்வு காலம் 2024 ம் ஆண்டு மே மாதம் வரை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜூன் 30 ம் தேதியுடன் இறையன்புவின் பதவிகாலம் முடிவடையும் நிலையில் ஜூன் 28 ம் தேதி புதிய தலைமை செயலாளரை  அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

பணி நிறைவு பெரும் இறையன்புவை முக்கிய பொறுப்புகளில் அமர்த்துவதாக முதலமைச்சர் விரும்புகிறார். அவரது அனுபவமும் திறமையும் தமிழகத்திற்கு தேவை என்பதன் காரணமாக  இந்த முடிவு எடுக்கப்படுகிறது என்றும் கூறுகின்றனர். அதனால் அவர் தலைமை தகவல் ஆணையராக இல்லை என்றால்  அரசு ஆலோசகராக பணி அமர்த்தலாம் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.