லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!! மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரபரப்பு!!
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி விட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆணையராக இருக்கும் மகேஸ்வரி மூன்று மாதங்களுக்கு முன்பு தான் பதவியேற்றார்.இவர் 2012 ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் எழுதிய பெண்களில் முதல் இடத்தை பிடித்தார்.
பின்னர் இவர் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் பகுதியின் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார்.அதன் பிறகு அவர் 2 ஆண்டுகளிலேயே அந்த நகராட்சியை சிறந்த நகராட்சியாக மாற்றியதற்காக அவருக்கு சிறந்த நகராட்சி ஆணையர் விருதும் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் நாமக்கல், கடலூர்,தருமபுரி , திண்டுக்கல் போன்ற பல இடங்களில் பணி புரிந்தார்.
அவர் தற்பொழுது 3 மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பதவியேற்றார்.இவர் ஆர்.எம் காலனியில் உள்ள ஒரு தனியார் அபார்ட்மெண்டில் குடியிருக்கின்றார்.
இன்று காலை மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டனர்.இதற்கு டி.எஸ்.பி நாகராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட போலீசார் வந்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறையானது ஆவணங்கள் மற்றும் லேப்டாப் போன்றவற்றை ஆராய்ந்து அதிரடி சோதனையில் ஈடுப்பட்டது. சோதனையின் போது குடியிருப்புக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை அதிகாரிகள்.
இவர் காஞ்சிபுரத்தில் பணிபுரியும் போது கிருமி நாசினி கொள்முதல் தொடர்பாக ஊழல் ஏற்பட்டுள்ளது என்ற புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. மகேஸ்வரி உறவினர்கள் உட்பட அனைவர் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.