Breaking News, Chennai, Crime, District News, News, State

ஜாமீன் வேண்டுமா ? அப்படினா முதலில் இதை செய்!! குற்றவாளிக்கு உயர்நீதிமன்ற  நீதிபதி கொடுத்த ஷாக் !! 

Photo of author

By Amutha

ஜாமீன் வேண்டுமா ? அப்படினா முதலில் இதை செய்!! குற்றவாளிக்கு உயர்நீதிமன்ற  நீதிபதி கொடுத்த ஷாக் !! 

கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீன் கேட்ட குற்றவாளிக்கு நீதிபதி நூதனமான முறையில் தண்டனை ஒன்றை வழங்கியிருந்தார். இது பாராட்டு பெற்றதோடு மிகவும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீன் கேட்ட நபருக்கு ரூபாய் 10 ஆயிரம் அரசு மருத்துவமனைக்கு நன்கொடை வழங்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்த ருசிகர சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

அந்த மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கஞ்சா விற்பனை பணியில் ஈடுபட்ட அந்த பகுதியை சேர்ந்த அபினேஷ் உட்பட 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சிறையில் தண்டனை பெற்று வந்த அபினாஷ் கடந்த 19ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து அபினேஷின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி குற்றவாளிக்கு ஜாமீன் வேண்டுமெனில் ரூபாய் 10 ஆயிரம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து குற்றவாளி சார்பில் பத்தாயிரம் ரூபாய் வரைவு  காசோலை எடுக்கப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் அறிஞர் அண்ணா மருத்துவமனை அலுவலரிடம் நன்கொடையாக  ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் அபினேஷுக்கு நீதிபதி ஜாமீன் வழங்கினார்.

உஷாரய்யா உஷார் பொதுமக்களுக்கு காவல்துறையின் கடும் எச்சரிக்கை! அதிகரித்து வரும் புதிய வகை வாட்ஸப் மோசடி!! 

ஹெலிகாப்டர் சகோதர்கள் பண்ணை வீட்டில் பதுங்கிருந்த போது கைது!! உதவி காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை!!