இரண்டு சிறுவர்களுக்கு “திருமணம்”!! மழைக்காக இப்படி எல்லாம் செய்வார்களா?
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சென்ற ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பார்ர்க்கும் போது இங்கு அதிக அளவில் மழைப் பெய்யவில்லை.
கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜபேட்டை தாலுக்கா உள்ளது. இந்த தாலுக்காவுக்கு உட்பட்ட கங்கனஹள்ளி என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் மழை பெய்ய வேண்டி ஒரு வினோத சம்பவத்தை செய்துள்ளனர்.
இவர்கள் இரண்டு சிறுவர்களுக்கு பாரம்பரிய கல்யாண ஆடைகளை அணிவித்து இரு சிறுவர்களையும் மணமக்களாக மாற்றி திருமண நிகழ்வு ஒன்றை நடத்தி உள்ளனர்.
மேலும் இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் மழை வர வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்துள்ளனர். இந்த திருமண நிகழ்வைத் தொடர்ந்து சிறப்பு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
கிராமவாசிகள் அனைவரும் இதில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டு உணவை உண்டு வந்தனர். இந்த வினோத சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் கூறிய கிராமவாசிகள், சென்ற ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த ஆண்டு கர்நாடகாவில் மழை பெய்தது மிகவும் குறைவு, வெயிலின் தாக்கத்தை தாங்க முடியவில்லை என்றும் கூறி உள்ளனர்.
எனவே மழை பற்றாக்குறையாக இருப்பதால், பழைய பாரம்பரிய நடைமுறைகளை கொண்டு வந்து அதை கொண்டாடுவோம் என்று முடிவு செய்ததாக அப்பகுதியில் வசிக்கும் கிராமவாசிகள் கூறி உள்ளனர்.
இந்த வினோத சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது. இரண்டு சிறுவர்கள் இவ்வாறு திருமணம் செய்து கொண்டது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
இது போன்ற சம்பவங்கள் பண்டைய காலங்களில் நடைமுறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது இதை கர்நாடகா மாநிலத்தில் உள்ள மக்கள் செய்தது அப்பகுதி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.