காசநோய் வராமல் இருக்கணுமா!! இந்த உணவுகளை ஃபாலோ பண்ணுங்கள் அருமையான டிப்ஸ்!!

0
180

காசநோய் வராமல் இருக்கணுமா!! இந்த உணவுகளை ஃபாலோ பண்ணுங்கள் அருமையான டிப்ஸ்!!

காச நோய் என்பது மைக்கோ பாக்டீரியா என்னும் நுண்ணுயிரிகளின் தாக்குதலால் மக்களுக்கு ஏற்படும் பெரும் தொற்றுநோய் ஆகும். இந்த நோய் ஏற்பட்டவர்களுக்கு சில நேரத்தில் இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இது மிக ஆபத்தான தொற்று நோயாகவும் உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் மில்லியன் கணக்கில் மக்கள் இந்த நோய்க்கு பலியாகிறார்கள். ஒரு கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு நாளும் மூன்று நிமிடங்களுக்கு இரண்டு பேர் உயிர் இழக்கிறார்கள்.

காரணம்

மோசமான உணவு பழக்கங்களை எடுத்துக் கொள்வதால் ஒருவருக்கு காச நோய் ஏற்படுகிறது. மோசமான உணவில் உணவினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காசநோய் தொற்று ஏற்படுகிறது. உடல் பலவீனம் அடைவதால் பாக்டீரியா உடலை தொடங்குவதால் நோய் தொற்று ஏற்படுகிறது. மேலும் இந்த தொற்று சுற்றுப் புறங்களிலும் பரவுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காசநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு காசநோய் ஏற்படுகிறது ஏனெனில் புகை பிடிக்கும் போது பாக்டீரியாக்களும் உள்ளே நுழைகிறது.

அறிகுறிகள்

1.வாய்வழி புற்றுநோய் மற்றும் மூச்சுக்குழல் அலர்ஜி

2. இந்தத் தொற்று நோய் ஏற்பட்ட அவர்களின் வாயிலிருந்து ரத்தம் வருதல் எடை குறைதல் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

3. காச நோய் ஏற்பட்டால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.

4. இரண்டு வாரம் தொடர்ந்து இருமல் ஏற்படும்

5. காசநோய் என்பது ஒரு தொற்று நோயாகும் மேலும் பாதிக்கப்பட்ட நபர்கள் பலவீனமடைந்து நுரையீரல் காச நோயை ஏற்படுத்தும்

6.சளியில் ரத்தம் வெளியேறும் தொடர்ந்து இருமல் இரவு முழுவதும் காய்ச்சல் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

காச நோய் இருப்பவர்கள் உண்ணக்கூடாது உணவுகள்

காரம் அதிகம் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது, குளிர்ச்சி தரும் பொருட்களையும் குளிர்ச்சி தரும் பழங்களையும் உணவில் சேர்த்து கொள்ளக் கூடாது மேலும் உப்புக்கள் நிறைந்த அப்பளம், குடல், கருவாடு போன்ற உணவுகளை உண்ணாமல் இருப்பது மிகவும் நல்லது

உண்ண வேண்டிய உணவுகள் நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகள் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், கோதுமை , ஓட்ஸ், நட்ஸ், சுடுதண்ணீர், துளசி இவைகளை எடுத்துக் கொள்வதால் காச நோய் விரைவில் குணமடையும். மேலும் இதனுடன் உடற்பயிற்சி மிக முக்கியமான ஒன்றாகும் எதனை அடுத்து காசநோய் தொற்று உள்ளவர்களிடம் நெருங்கி பழகாமல் இருப்பது உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.