முதல் பெண் ஓட்டுனருக்கு  பரிசளித்த உலகநாயகன் என்ன தெரியுமா ?? பஸ் போனால் போகட்டும்  மீண்டும்  தனது பணியை தொடங்கும் சர்மிளா !! 

0
208
Do you know what the world hero gifted to the first female driver?? Let the bus go, Sharmila will start her work again!!
Do you know what the world hero gifted to the first female driver?? Let the bus go, Sharmila will start her work again!!

முதல் பெண் ஓட்டுனருக்கு  பரிசளித்த உலகநாயகன் என்ன தெரியுமா ?? பஸ் போனால் போகட்டும்  மீண்டும்  தனது பணியை தொடங்கும் சர்மிளா !! 

கோவையின் முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு உலகநாயகன் கமல் பரிசளித்தார்.

கோவையை சேர்ந்த முதல் பெண் ஓட்டுனர் ஷர்மிளா இவர் ஒண்டிப்புதூர் -வடவள்ளி வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்து ஓட்டுனராக பணி புரிந்தார். மாவட்டத்தின் முதல் பெண் ஓட்டுனரான சர்மிளாவுக்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்தன.

இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த கனிமொழி எம்பி சர்மிளாவின் பஸ்ஸில் பயணம் மேற்கொண்டார் அவர் பயணச்சீட்டு எடுத்து சிறிது தூரம் பயணம் மேற்கொண்டு சர்மிளாவுக்கு பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்து கிளம்பியுள்ளார்.

இந்த நிகழ்ச்சி பெரும் பரபரப்பாகவே பேருந்து உரிமையாளருக்கும் சர்மிளாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அவர் ஓட்டுனர் பணியில் இருந்து ராஜினாமா செய்தார். இதைக் கேள்விப்பட்ட மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  ஷர்மிளாவுக்கு கார் ஒன்றை பரிசாக கொடுத்தார். கமலின் பண்பாட்டு மையம் சார்பாக இந்த கார் பரிசளிக்கப்பட்டது.

இது பற்றி மக்கள் நீதி மையம் தந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி அதேபோல  கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா. பேருந்து ஓட்டுநராக வரவேண்டும் என்ற  தன்னுடைய கனவிற்காக உழைத்து சவாலான பணியை திறம்படச் செய்து வந்துள்ளார்.அதற்காகப் பல்வேறு தரப்பிலிருந்தும் பல்வேறு  பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

தனது வயதில் உள்ள பெண்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்த ஷர்மிளாவைப் பற்றிய சமீபத்திய விவாதங்கள் என்னுடைய கவனத்திற்கு வந்தது. அவர் ஒரு ஓட்டுனராக மற்றும் இருக்க வேண்டியவர் அல்ல. பல ஆயிரக்கணக்கான ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவர்.

எனவே கமல் பண்பாடு மையம் சார்பாக கார் ஒன்றினை பரிசாக வழங்குகிறது. இனிமேல் கார் ஓட்டுனராக புதிய தொழில் முனைவராக தனது பணியை ஷர்மிளா இனிமேல் தொடங்குவார். ஆண்டாண்டு காலமாய் அடக்கிவைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தளைகளை உடைத்து தரணி ஆளவருகையில் ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

மகள் ஷர்மிளாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Previous articleஅரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகத்தின் புதிய திட்டம்!! கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை!!
Next articleஇருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு !! இனிமேல் இது கட்டாயம் மாநகராட்சி போலீசார் அதிரடி !!