காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்? அப்போது கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

0
210
#image_title

காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்? அப்போது கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

பல பேருக்கு காலையில் எழுந்தவுடன் அந்த நாள் தொடங்குவதே டீ -யில் தான் தொடங்கும். சில பேர் இவ்வாறு காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பார்கள் சில பேர் காலை உணவு உண்ட பிறகு டீ குடிப்பார்கள்.

இவ்வாறு டீ குடிப்பது உடம்பிற்கு சக்தியை தருகிறது என்று சிலர் நினைக்கிறார்கள் ஆனால் இவ்வாறு வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் என்ன தீமைகள் ஏற்படும் என்பதை யாராவது யோசித்து இருக்கிறீர்களா? வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பது உடம்பிற்கு நல்லதல்ல என்று மருத்துவர்கள் பலர் கூறி வருகின்றனர்.

காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். நம்மில் பல பேர் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பெட் டீ பெட் காபி என்று குடித்து வருகிறார்கள். இதனால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் பல ஆரோக்கிய நிபுணர்களும் காலையில் தண்ணீர் கூட பருகாமல் இந்த டீ காபியை குடிப்பதனால் உடலில் பலவிதமான பிரச்சனைகள் வரும் என்று கூறுகின்றனர். இவ்வாறு குடிப்பதால் செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகள் அதிகம் ஏற்படும்.

மேலும் உடம்பில் உள்ள மெட்டபாலிசத்தை பாதிக்கிறது. செரிமானம் சரியாக நடக்காததால் நம் உடம்பிற்கு சக்தியும் கிடைக்காது. இதனால் நம் உடம்பில் கொழுப்பு அதிகமாகி உடல் எடைக்கு வழிவகுக்கிறது. மேலும் இந்த டீ காபி குடிப்பதால் டயாபடீஸ் வரும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.

டீ காபி குடித்து பழகி விட்டவர்கள் அதை குடிப்பதை நிறுத்த முடியாத பட்சத்தில் காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரை பருகி விட்டு பிறகு டீ காப்பியை குடிக்கலாம் இவ்வாறு செய்வதால் எந்த விதமான பக்க விளைவும் ஏற்படாது என்று பல நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.

Previous articleஅட!! இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே!! ஒரு கொத்து இலையில் இவ்வளவு பயன்களா?
Next articleசிறுநீரகத் தொற்று, அரிப்பு, புண் இவற்றிற்கு உடனடி தீர்வு!!கவலை வேண்டாம் இரண்டு நிமிடம் போதும்!!