ஒரே ஒரு இரவில் மூட்டு வலி நீங்க வேண்டுமா!!அப்போ இந்த மருந்தை பயன்படுத்துங்க!!
தீராத மூட்டுவலி இருப்பவர்களுக்கு ஒரே ஒரு இரவில் மூட்டுவலியை குணமாக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஒரே இரவில் மூட்டு வலியை நீக்க இந்த பதிவில் பட்டையை பயன்படுத்தி மருந்து தயாரிப்பது எவ்வாறு என்று தெரிந்து கொள்வோம்.
பட்டை இயற்கையாகவே மருத்துவ குணங்கள் நிறைந்த ஒன்று. இந்த பட்டையில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. பட்டை நம் உடலில் ஏற்படும் வலிகளை குறைக்கும் வலி நிவாரணியாக செயல்படுகின்றது. நம் உடலில் உள்ள செரிமான உறுப்புகளை பலப்படுத்துகின்றது. அதிக அளவில் உணவுகளை உட்கொள்ளும் பொழுது செரிமாணத்தை தூண்டுகின்றது.
மேலும் பட்டை நம் உடலில் இருக்கும் ரத்தத்தை சுத்தப்படுத்துகின்றது. ரத்த ஓட்டம் இல்லாமல் ஏற்படும் மூட்டு வலி, மூட்டு வீக்கம் போன்றவற்றை பட்டை குணப்படுத்துகின்றது. மூட்டு தேய்மானம், வாயு காரணமாக ஏற்படும் மூட்டு வலி போன்றவற்றையும் பட்டை குணப்படுத்தும்.மூட்டுகளில் உப்பு சேர்ந்தாலும், யூரிக் ஆசிட் அதிகமானாலும், மூட்டுகளில் உள்ள ஜவ்வு தேய்ந்து ஏற்படும் வலியையும் பட்டை ஓரிரண்டு நாட்களில் சரி செய்துவிடும்.
பட்டையுடன் சேர்த்து மூட்டு வலியை குணமாக்க பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும். பூண்டு பற்றி அனைவருக்கும் தெரியும். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. பூண்டு வாயுப்பிரச்சனையை சரிசெய்யக்கூடியது. வலி நிவாரணியாகவும் இது செயல்படும். பூண்டு எடுத்து பட்டைப் பொடியுடன் சேர்த்து மூட்டு வலிக்கு பயன்படுத்தும் பொழுது மூட்டு வலி இருந்த இடம் தெரியாமல் குணமாகிவிடும். இதை எவ்வாறு செய்து பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம்.
இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…
* பட்டை
* பூண்டு
* ஆமணக்கு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்
* கடுகு எண்ணெய்
செய்முறை
முதலில் பட்டையை பொடியாக செய்து கொள்ளவும். பிறகு எடுத்து வைத்துள்ள பூண்டு பற்களை தட்டி எடுத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து அதில் பட்டை பொடி தேவையான அளவு, தட்டி வைத்துள்ள பூண்டு, ஆமணக்கு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் கடுகு எண்ணெய் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் கேஸ்டர் ஆயில் இதில் சேர்த்துக் கொள்ளவும். இதை அப்படியே சிறிது நேரம் காய்ச்ச வேண்டும்.
பூண்டு மற்றும் பட்டையின் சத்துக்கள் இந்த எண்ணெயில் இறங்கும் வரை காய்ச்ச வேண்டும். நன்கு காய்ச்சிய பிறகு இதை இறக்கி விட வேண்டும். பிறகு இதை ஆறவைக்க வேண்டும். பின்னர் இந்த எண்ணெயையை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேர்த்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை…
இந்த எண்ணெயை எடுத்து மூட்டுகளில் சிறிதளவு தேய்க்க வேண்டும். தேய்த்து விட்டு சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். மூட்டுகள் தாங்கக் கூடிய அளவு சூடு இருக்கும் பொழுது மூட்டுகளில் தேய்த்தால் பலன் இன்னும் அதிகம் கிடைக்கும்.
இந்த எண்ணெயை தேய்த்து மசாஜ் செய்த பிறகு ஒரு பிளாஸ்டிக் கவர் வைத்து நன்கு கட்டிக் கொள்ளவும். ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழித்து சுடு தண்ணீரால் மூட்டுகளை கழுவ வேண்டும். இதை ஒரு நாளுக்கு இரண்டு முறை என்று தொடர்ந்து மூன்று நாட்கள் செய்தால் மூட்டு வலிகள் பறந்து போகும்.