நீட் பயிற்சி மையத்தில் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் பயிற்சி மையத்தில் எராளமான மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்நிலையில் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்களில் இருவர் ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொட்டுள்ளார்கள். இந்த சம்பவம் அந்த பகுதில் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஒருவர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்யா சேத் மற்றும் மற்றொருவர் உதய்பூர் பகுதியைச் சேர்ந்த மெஹீல் வைஷ்ணவ் என்பது தெரியவந்துள்ளது. இதில் ஆதித்யா சேத் என்ற மாணவன் என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதி வைத்துள்ளான்.
இது குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தற்போது வரை அந்த பயிற்சி மையத்தில் 2.25 லட்சம் பேர் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
மேலும் விசாரணையில் 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 52பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். அதனையடுத்து மாணவர்களுக்கு தேர்வின் தோல்வி பயம், குறைவான மதிப்பெண் மற்றும் பெற்றோர்களின் அழுத்தம் போன்ற காரணகளால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளுவதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த தொடர் தற்கொலை சம்பவம் மாணவர்கள் மற்றும் பொற்றோர்கள் இடையே அதிதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.