நாளை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும்!! காவல் துறை அறிவிப்பு!!
சென்னையில் உள்ள பெசன்ட் நகர் பகுதி முதல் கலங்கரை விளக்கம் வரை மொத்தம் ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு சனிக்கிழமையான நாளை மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.
இந்த மாரத்தான் போட்டியானது சென்னையில் அதிகாலை நான்கு மணி முதல் காலை ஏழு மணி வரையில் நடைபெற உள்ளது. சென்னை பெசன்ட்நகரில் துவங்கி கலங்கரை விளக்கம் வரை இந்த மாரத்தான் நடைபெறுவதை அடுத்து பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்த போட்டி நடைபெறும் பகுதிகளிலும் அதற்கு அருகே உள்ள பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
எனவே நாளை பெசன்ட்நகர், சாஸ்திரிநகர், மந்தைவெளி, அடையாறு, திரு.வி.க.பாலம், மயிலாப்பூர், கலங்கரைவிளக்கம் போன்ற பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
இது மட்டுமின்றி மேலும் சில பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாரத்தான் போட்டி நடைபெற இருப்பதால் இதற்கு எந்த விதத்திலும் இடையூறு வராமல் இருப்பதற்காக இந்த போக்குவரத்து மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் இதில் ஏராளமான இளைஞர்கள், பெரியவர்கள் என பலரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகனம் ஓட்டுபவர்கள் எந்த விதத்திலும் இடையூறு தெரிவிக்காமல் தங்களது முழு ஒத்துழைப்பை தர வேண்டும் என்று காவல் துறையினர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் இந்த மாரத்தான் போட்டி நடந்து முடிந்த பிறகு போக்குவரத்து திரும்பப் பழைய நிலைக்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.