ஒரு லாரியால் 51 பேர் பலி மக்கள் இடையில் பதற்றம்!! வெளிவந்த அதிர்ச்சி  தகவல்!!

ஒரு லாரியால் 51 பேர் பலி  மக்கள் இடையில்  பதற்றம்!! வெளிவந்த அதிர்ச்சி  தகவல்!!

ஒரு லாரியால் 51 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி இணையத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில் அந்த சம்பவம் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கெய்னாவில் லண்டைனி  மாகாணம் ரிப்ட் வேலி நகரில் நெடுஞ்சாலை அருகே உள்ள  சந்தை பகுதியில் நடந்துள்ளது.

ஜூன் மாதம் 30 ஆம் தேதி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்தாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து   கட்டுப்பாட்டை இழந்த லாரி வேகமாக சாலையின் அருகே இருந்த சந்தைக்குள் நுழைந்தது.  அந்த லாரி  நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் மீதும்  மற்றும் அங்கிருந்த கடைகள் மீதும் வேகமாக மோதியது.

கட்டுப்பாட்டை இழந்த லாரியை பார்த்த மக்கள் அலறியடித்து ஓடினர். ஆனாலும் பலர் அந்த லாரி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்கள். இந்த கோர விபத்தில் 51 பேர் உயிரிழந்தாக கூறப்படுகிறது. மேலும் 31 பேர் பலத்த காயம் அடைந்தாக மீட்பு பணி வீரர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அதனையடுத்து அந்த பகுதியில் தற்போது கனமழை தொடர்வதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த விபத்து பகுதியில்  இன்னும் சிலர் சிக்கியுள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.