சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் கூட்டணி!! புதிய அப்டேட் கதாநாயகி பாலிவுட் நடிகை!!

0
71
Sivakarthikeyan AR Murugadoss Alliance!! New Update Heroine Bollywood Actress!!
Sivakarthikeyan AR Murugadoss Alliance!! New Update Heroine Bollywood Actress!!

சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் கூட்டணி!! புதிய அப்டேட் கதாநாயகி பாலிவுட் நடிகை!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் பிரிண்ஸ். இப்பொழுது அவர் நடித்திருக்கும் படம் மாவீரன் இந்த பட்டத்தின் படபிடிப்புகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜூலை 14 ம் தேதி இந்த படம் வெளியிடப்பட உள்ளது.

மேலும் சிவகார்த்திகேயன் அடுத்து யாருடன் இணையப்போகிறார் என்று ரசிகர்களிடையே பல எதிர் பார்ப்புகள் இருந்த நிலையில் இது குறித்து புதிய அப்டேட் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி ட்ரெண்டிங் செய்யப்பட்டு வருகின்றது.

சிவகார்த்திகேயன் அவர்கள் ஏஆர் முருகதாஸ் உடன் இணைய போகிறார் என்றும் இது ஒரு ஆக்சன் படம் என்றும்  இந்த படம் ஒரு பெரிய அளவு பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.இந்தநிலையில் இந்த படத்தின் கதாநாயகி யார் என்று ரசிகர்களுடையே பரபரப்பு கிளம்பியுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் கதாநாயகி பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றார்.கடந்த வருடம் வெளியான சீதாராமன் என்ற படத்தின் கதாநாயகி இவர்.

இந்த படம் மூலம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது.இவற்றின் மூலம் ஏராளாமான தமிழ் சினிமா  ரசிகர்களை தன் பக்கம் வைத்துள்ளார்.இவர் இப்பொழுது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில்   சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு வலுசேர்க்கும் விதமாக அனிரூத் அவர்கள் இசையமைக்க உள்ளார்.நீண்ட கால இடைவெளிக்கு பிறகு ஏஆர் முருகதாஸ் அவர்கள் மீண்டும் படம் தாயரிக்க இருப்பதால் இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றது.

இதனால் சிவகர்த்திகேயன் மற்றும் ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் வெளியாகும் இந்த படம் தரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Parthipan K