மக்களே உஷார் !! இந்த மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை!!
இன்று இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுப்பற்றி வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. அடுத்து காற்றின் திசை வேகமாறுபாடு காரணத்தினால் ஜூலை 3ஆம் தேதியான இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் கனமழை மற்றும் மிக கனமழையும், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன.
அதேபோல ஜூலை 4 ஆம் தேதி நீலகிரி, கோவை,மற்றும் தேனி மாவட்டங்களில் கனம் முதல் மிகக் கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி,திருநெல்வேலி,கன்னியாக்குமரி,விருதுநகர், மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, மற்றும் குமரிகடல் பகுதிகள், தென்மேற்கு வங்ககடலின் தெற்கு பகுதிகள்,தென்கிழக்கு, மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு சுமார் 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையில் 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே இந்த நாட்களில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப் பட்டுள்ளனர்.