ஒரு மலரில் ஓராயிரம் நன்மைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா!! இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By CineDesk

ஒரு மலரில் ஓராயிரம் நன்மைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா!! இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்!!

CineDesk

ஒரு மலரில் ஓராயிரம் நன்மைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா!! இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்!!

செம்பருத்தி பூ என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதை பல பேர் வீட்டின் அருகே அழகுக்காக வளர்த்து வருகிறார்கள். ஆனால் இதன் மருத்துவ குணங்கள் நிறைய பேருக்கு தெரிவதில்லை. எனவே செம்பருத்தி பூவின் சில மருத்துவ குணங்களை இங்கு அறிந்து கொள்வோம்.

இந்த செம்பருத்தி யை வைத்து தலைக்கு எண்ணெய் செய்து உபயோகப்படுத்தி வருவோம். ஆனால் நம் இருதயத்தை காப்பாற்றுவதே இந்த செம்பருத்தி தான் என்பது பல பேருக்கு தெரியாத ஒரு விஷயமாகும். இதயத்தை நன்கு பலப்படுத்தவும் இதயத்தில் ஏதேனும் கோளாறுகள் இருந்தாலும் இதய அடைப்புகள் ஏதேனும் இருந்தாலோ சுவாச பிரச்சனைகள் ஏதேனும் இருந்தாலோ அதை சரி செய்யவும் இந்த செம்பருத்தி மிகவும் பயன்படுகிறது.

செம்பருத்தி, துளசி, மருதம்பட்டை ஆகிய மூன்றையும் சூரணம் ஆக்கி தினமும் காலையில் வெந்நீரில் 10 கிராம் சேர்த்து சாப்பிட்டு வர உடலில் உள்ள உயர் ரத்த அழுத்தமானது கட்டுக்குள் வந்துவிடும். மேலும் பல பேர் கோடை காலங்களில் நீர் கடுப்பு, நீர் சுருக்கம், நீர் எரிச்சல் போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள்.

இந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த செம்பருத்தியின் இலைகளை பறித்து அதனை கிழித்து தண்ணீரில் போட்டு அதனுடன் ஒரு கைப்பிடி அளவு பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர உடல் சூடு தணிந்து நீர்க்கடுப்பு, நீர் சுருக்கம், நீர் எரிச்சல் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.