Breaking News, Crime, National, Politics

பழங்குடியின மனிதர் முகத்தில் சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர்! வீடியோ வைரலானதால் பாஜக பிரமுகருக்கு குவியும் கண்டனங்கள்!!

Photo of author

By Sakthi

பழங்குடியின மனிதர் முகத்தில் சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர்! வீடியோ வைரலானதால் பாஜக பிரமுகருக்கு குவியும் கண்டனங்கள்!!

Sakthi

Updated on:

Button

பழங்குடியின மனிதர் முகத்தில் சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர்! வீடியோ வைரலானதால் பாஜக பிரமுகருக்கு குவியும் கண்டனங்கள்!!

 

மத்தியபிரதசே மாநிலத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த நபரின் முகத்தின் மீது பாஜக பிரமுகர் ஒரு சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பாஜக பிரமுகருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றது.

 

மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தை சேர்ந்த குப்ரி கிராமத்தில் இருக்கும் ஒரு பழங்குடியின நபர் மீது பாஜக கட்சியின்  எம்.எல்.ஏ வேட்பாளர் பிரவேஷ் சுக்லா சிறுநீர் கழித்துள்ளார். பிரவேஷ் சுக்லா புகைபிடித்துக் கொண்டே அந்த பழங்குடியன நபரின் முகத்தின் மீதும், கழுத்தின் மீதும், உடல் முழுவதிலும் பிரவேஷ் சுக்லா சிறுநீர் கழித்துள்ளார். இந்த சம்பவத்தை அருகில் உள்ள ஒரு நபர் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையம் முழுவதும் வைரலாக பரவியது.

 

மனிதாபிமானம் என்பது சிறிதளவும் இன்றி பிரவேஷ் சுக்லா செய்த இந்த செயலுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நெட்டிசன்களும் இந்த செயலுக்கு எதிராக தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

பிரவேஷ் சுக்லா என்பவர் தேர்தலில் பாஜக கட்சி சார்பாக எம்.எல்.ஏ வேட்பாளராக போட்டியிட்டவர் ஆவார். பாதிக்கப்பட்ட அந்த நபர் சித்தி மாவட்டத்தை சேர்ந்த கரவுண்டி கிராமத்தை சேர்ந்த தஸ்மாத் ராவத் ஆவார்.

 

பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லா செய்த அநாகரிக செயல் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் அவர்களின் பார்வைக்கு செல்ல முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் அவர்கள் பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லாவை கைது செய்ய உத்தரவிட்டார்.

 

இதையடுத்து பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லா அவர்கள் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கிழும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மின்வேலி அமைக்கப் போகின்றீர்களா ??இனிமேல் இதுதான் ரூல்ஸ் தமிழக அரசு அதிரடி!!

பேருந்து நிறுத்தத்தின் மீது மோதிய கார்!! 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!