கல்லூரி தொடங்கிய முதல் நாளே மாணவர் வாழ்க்கையில் நேர்ந்த சோகம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!
சென்னை சேர்ந்த ராஜன் மகன் தம்பிதுரை இவர் 12 ஆம் வகுப்பு முடித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் தற்போது சேர்ந்துள்ளான். மேலும் அவன் சிறு வயது முதலே பாட்டி வீட்டில் இருந்து படித்து வருகிறான். பாட்டியுடன் காஞ்சிபுரம் எனத்தூர் பகுதியில் வசித்து வந்தான்.
அதனையடுத்து கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று முதல் வகுப்பு தொடங்கியது. இந்த நிலையில் இன்று கல்லூரிக்கு சென்று கல்லூரி கட்டணம் கட்டிவிட்டு வருவதாக கூறி இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.
அதனையடுத்து கல்வி கட்டணத்தை கட்டிவிட்டு வீட்டிற்கு திரும்பிய நிலையில் எதிரே வந்த மினிலாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் தலையில் காயம் காரணமாக அதிக ரத்தம் வெளியேறியது. அதனை தொடர்ந்து அங்கிருந்த கல்லூரி மாணவர்கள் அந்த மாணவனை மீட்டு 108 அவசர ஊர்தியில் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தை பற்றி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தாக தெரிவித்துள்ளார்கள். இது குறித்து காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை எற்படுத்தியுள்ளது. கல்லூரிக்கு சென்ற முதல் நாள் நேர்ந்த விபத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சிக்கு உள்ளார்கள்.