கனமழை தொடரும் மாவட்டங்கள்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இந்த வகையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகே இருக்கக்கூடிய மாவட்டங்களான திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கனமழை தொடரும் என்று கூறிய பட்சத்தில், இனி வரும் நாட்களில் குறைந்து விடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் அடுத்து வரக்கூடிய சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். தமிழக கடலோர பகுதிகளான, மன்னார் வளைகுடா, மத்திய மேற்கு வங்கக்கடல், குமரி கடல் பகுதி மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 65 கி.மீ. அளவில் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது. இதைபோலவே, இலங்கை கடலோர பகுதிகளிலும் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு நாட்களாக கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை பெய்து வந்தது. ஆனால் தற்போது 42 சதவிகிதமாக குறைந்துள்ளது. எனவே கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் கனமழை இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.