“திரெட்ஸ்” செயலி டிவிட்டரின் பிரதி!! மெட்டா மீது ட்விட்டர் நிறுவனம் குற்றச்சாட்டு!!
உலகின் முன்னணி சமூக வலைதளமாக இருப்பது தான் ட்விட்டர் நிறுவனம். தற்போது இதற்கு போட்டியாக இருக்கும் வகையில் “திரெட்ஸ்” என்னும் வலைத்தளம் துவங்கப்பட்டுள்ளது.
இந்த வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே ஒரு கோடி பேர் இதில் இணைந்துள்ளனர். இந்த திரேட்ஸ் வலைத்தளம் குறித்து ஒருவர் இது டிவிட்டரின் பிரதி என்று கூறி உள்ளார்.
தற்பொழுது மூன்று கோடிக்கும் மேலான பயனர்களை பெற்றுள்ள திரெட்ஸ் நிறுவனமானது, டிவிட்டரின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு எழுந்துள்ளது.
டிவிட்டரின் விரத்தக ரகசியங்களையும், பிற அறிவுசார் சொத்துக்களை சட்டவிரோதமாக மெட்டா பயன்படுத்தி இருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், டிவிட்டரின் ரகசியங்கள் மற்றும் உயர் தகவல்களை அறிந்த முன்னாள் ஊழியர்கள் சிலரை மெட்டா பணியில் அமர்த்தி உள்ளது என்றும் ட்விட்டர் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கு பதில் அளித்த திரெட்ஸ் நிறுவனம் டிவிட்டரின் ஊழியர்கள் யாரும் பணியமர்த்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். எவ்வளவு சமூக வலைதளங்கள் இருந்தாலும், ட்விட்டர் தனது முதல் இடத்தை இதுவரை தக்க வைத்துக்கொண்டு இருக்கிறது.
ஆனால் தற்போது மெட்டா நிறுவனத்தின் இந்த திரெட்ஸ் செயலி இதற்கு போட்டியாக களமிறங்கியுள்ளது. இந்த திரெட்ஸ் வலைதளத்தில் பயனர்கள் அனைவரும் தங்களது உரை மற்றும் இணைப்புகளை பதிவிடலாம்.
மேலும், மற்றவரிடமிருந்து வரும் செய்திகளுக்கு பதிலளிக்கலாம், மறுபதிவும் செய்யலாம் என்று கூறி உள்ளது. டிவிட்டரில் இருப்பதைப்போன்றே இதிலும் ஏராளமான வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது.