பேருந்து, ரயில்கள் போல லாரிகளில் ஏசி வசதி! அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி!!

0
27

பேருந்து, ரயில்கள் போல லாரிகளில் ஏசி வசதி! அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி!!

 

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் லாரிகளில் ஏசி வைத்துக் கொள்ள மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

 

மத்திய அரசு வழங்கிய ஒப்புதல் காரணமாக என்- 2 மற்றும் என்-3 ஆகிய வகை லாரிகளில் ஏ.சி பொறுத்துவது கட்டாயம் செய்யப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் “N2 மற்றும் N3 வகைகளைச் சேர்ந்த டிரக்குகளின் கேபின்களில் ஏர் கண்டிஷனிங் அமைப்புகளை நிறுவுவதை கட்டாயமாக்குவதற்கான வரைவு அறிவிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

சாலை பாதுகாப்பை உறுதி செய்வதில் டிரக் டிரைவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.  இந்த முடிவு டிரக் டிரைவர்களுக்கு வசதியான வேலை நிலைமைகளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது” என்று அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.