இனி சிக்னலில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

0
97
No need to stop at signal anymore!! Government release action notice!!
No need to stop at signal anymore!! Government release action notice!!

இனி சிக்னலில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனை சரி செய்வதற்கு தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து துறை அதிகாரிகள் எப்பொழுதும் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டே இருக்கின்றனர்.

அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் தங்களது தினசரி வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.அதிலும் குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

இதனை கட்டுபடுத்தும் விதமாக அந்த மாநில காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புதிய மேம்பாலம் ஒன்றை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த மேம்பாலமானது சைதாப்பேட்டை முதல்  தேனாம்பேட்டை வரை அமைக்கப்பட உள்ளது. இதற்கு மட்டும் தமிழக அரசு ரூ.621 கோடி ஒதிக்கீடு செய்துள்ளது.

தற்போது இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த புதிய மேம்பாலமானது சுமார் 3.5 கிலோமீட்டர் உயர்மட்ட தொலைவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு அதிக அளவிலான  போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறைக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள்  கூறுகின்றனர்.

புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டால் வாகன ஓட்டிகள் எந்த சிக்னலிலும் நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்படுகின்றது.மேலும் இதன் மூலம் பயணிக்கும் பொதுமக்களின் பயண நேரம் 15 நிமிடம் வரை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous articleகடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய திண்டுக்கல் டிராகண்ஸ் வீரர்! இருந்தும் முதல் முதல் குவாலிபையர் போட்டியில் தோல்வி கண்ட திண்டுக்கல் அணி!!
Next articleஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி! அணியை அறிவித்த மேற்கிந்திய தீவுகள் அணி நிர்வாகம்!!